TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
அன்புஇருதயம்தாவீதுவேதாகம மனிதர்கள்

தகப்பனின் உள்ளம்

தனது தனயனுடைய நலனை விசாரிக்கும் தன்னிகரற்ற ஓர் அன்பு தகப்பன்

தாவீது தனது மகனாகிய அப்சலோமின் நலனை விசாரிக்கும்போது நெஞ்சை உருக்கும் ஓர் நிகழ்வு.

( 2 சாமுவேல் 13-18 அதிகாரங்கள் )

அப்சலோம் சுகமாயிருக்கிறானா ? 18:29

  • கொலை செயலை செய்தவனாயினும் (13:30) அவன் சுகமாயிருக்கிறானா ?
  • என்னை வெறுப்பவனாயினும் (14:28) அவன் சுகமாயிருக்கிறானா ?
  • என் கண்ணீருக்கு காரணமானவனாயினும் (15:30) அவன் சுகமாயிருக்கிறானா ?
  • வீட்டை விட்டோடி வெகுநாளாயிற்றே (13:30) அவன் சுகமாயிருக்கிறானா ?
  • என்னை வெறுங்காலால் விரட்டிவிட்டவனாயினும் (15:30) அவன் சுகமாயிருக்கிறானா ?
  • அழிப்பதற்கு ஆட்களோடு வந்தவனாயினும் (15:12) அவன் சுமாயிருக்கிறானா ?
  • என் நற்பெயரின் வாசனையை கெடுத்துப்போட்டவனாயினும் (16:21-22) அவன் சுகமாயிருக்கின்றானா ?

என்னதானிருந்தாலும் அவன் என் பிள்ளையாண்டான்,
பிள்ளையாண்டானை மெதுவாய் நடத்துங்கள். (18:5)

நற்செய்தியை எதிர்பார்த்த தாவீதிற்கு துற்செய்தி வந்தவுடன் அழுதான், என் மகனே, என் மகனே என்று. (18:33)

நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவும் இவ்வாறுதானே நம்மில் அன்புகூர்ந்து அழுதார்.

செட்டைகளின்கீழ் சேர்த்தனைத்திடும் சொந்தத்தாயின் அன்பதுவே எருசலேமே !எருசலேமே ! என்றழுதார் கண் கலங்க”

பதினாயிரம் உபாத்தியாயர்கள் இருக்கிறார்கள், ஆனால் தகப்பன்மார்கள் உங்களுக்கு இல்லையே ???
1 கொரிந்தியர் 4:15 😭😭😭😭

தேவனே, தயவு காட்டும் தகப்பனின் இதயத்தை எனக்குத் தாரும் !

K. ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)