TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7தேவன்

இரக்கங்களின் பிதா

நம்முடைய தேவன் இரக்கமுள்ளவர். அவருடைய நாமமே இரக்கம் (யாத் 34:1,2) என்பதாகும். மட்டுமல்ல, பிதாவாகிய தேவனுடைய பண்புகளில் இரக்கமும் ஒன்றாகும் (2 கொரி 1:3). குமாரனாகிய கிறிஸ்துவும், உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறார் என்று அவரை சுட்டிக்காட்டுகிறார் (லூக் 6:36).  

தாவீது தேவனின் இரக்கத்தை நன்றாக அறிந்திருந்தபடியால், அவனுடைய தவறுக்கு தேவன் தண்டனையை அனுப்பிய போது, அவ்ருடைய கையிலே விழுவேன் என்றான். காரணம், அவ்ரின் இரக்கங்கள் மகா பெரியது (2 சாமு 24:14).

  • அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை (புல 3:22).
  • ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவர் (உபா 5:10).

தேவனின் இரக்கத்தின் செயல் வேதாகமம் முழுவதிலும்  நிறைந்துள்ளது. அவற்றில் சில, நம் சிந்தனைக்கு

தேவனின் இரக்கங்கள் நமக்கு என்ன செய்கிறது?

1. பூமியின் எல்லைவரை சிதறியோரை, ஓரிடத்தில்ஒன்று சேர்க்கிறது. உபா 30:3

2. வீழ்ச்சியடைந்த வாழ்வை, விருத்தியடைய செய்கிறது. உபா 13:18

3. சீர்கேட்டில் சிக்கியோரை, சீக்கிரமாய் விடுவிக்கிறது.  நெகே 9:28

4. அறிக்கை செய்யும் பாவங்களை,  கரைகளின்றி கழுவுகிறது. சங் 51:1-2

5. தகர்ந்து இடிந்த வாழ்வை, தலை நிமிர்த்தி கட்டுகிறது. சங் 102:13-15

6. மாண்டுபோன வருடத்தை, மீண்டும் புதிதாக்குகிறது. சங் 103:4-5

7. குரலெலுப்பி கூப்பிட்ட உடனே,  குதூகலமான பதிலைத் தந்தருளுகிறது.  ஏசா 30:19

“அவருடைய  இரக்கங்களுக்கு முடிவில்லை , அவை காலைதோறும் புதியவைகள்.” புலம்பல் 3:22-23

K. Ramkumar Hosur

One thought on “இரக்கங்களின் பிதா

  • M.Gnanaprakasam

    Very useful messages, thanks a lot

    Reply

Leave a Reply to M.Gnanaprakasam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)