பாடுகளின் பலன்கள்
பாடுகள் நம்மை பலவீனப்படுத்துகிறது என்று எண்ணுகின்றோம். ஆனால், பவுல் தன்னுடைய சிறைவாசத்தின் மூலமாய் “பாடுகள் பலன்களைத் தருகிறது” என்பதை பிலிப்பிய சபைக்கு எழுதுகின்றார் (பிலிப்பியர் 1:12-18). தேவன் அனுமதிக்கும் “பாடுகள் சுவிசேஷத்தை பின்னடைய செய்வதல்ல, பிரபலமடையவேச் செய்யும்” (பிலி 1:12)
பவுலின் பாடுகளின் பலன்கள்: (பிலிப்பியர் 1:12-18)
- அரண்மனையில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது (பிலி 1:13).
- சகோதரர்கள் கர்த்தருக்குள் திடன்கொண்டனர் (பிலி 1:14).
- சுவிசேஷம் சொல்ல சகோதரர்களுக்கு தைரியம் உண்டானது (பிலி 1:14).
- கிறிஸ்து பிரசங்கிக்கப்பட்டார் / அறிவிக்கப்பட்டார் (பிலி 1:15; 18).
- சகோதரர்களின் அறிதலும், அன்பும் வெளிப்பட்டது (பிலி 1:17).
- விரோதிக்கிறவர்களாலும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது (பிலி 1:15; 16).
- பவுல் பாடுகளிலும் மகிழ்ச்சியை கண்டடைந்தார் (பிலி 1:18).
கே. விவேகானந்த்