TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
ஆராதனை தியானம்இயேசு கிறிஸ்துசிலுவை

சிலுவையின் மரணபரியந்தமும் (பிலி 2:8)

பாவத்தில் வாழ்ந்த நம்மை மீட்பதற்காக கிறிஸ்து எந்த அளவுக்கு கடந்து சென்றார் என்பதை இந்த வாக்கியம் நமக்கு காண்பிக்கிறது. “சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.” (பிலி 2:8 – திருவிவிலிய மொழிபெயர்ப்பு)

அதாவது நம்மில் வைத்த அன்பின் நிமித்தம் சிலுவை மரணத்தையே அவர் ஏற்றுக் கொண்டார்.  ஏனெனில்…

  1. சிலுவை மரணம் ஒரு வேதனையின்  உச்சகட்ட மரணம்.

“அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்;” (மத் 20:19) 

  1. சிலுவை மரணம் ஒரு அவமானத்தின் மரணம்.

“அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து,” (எபி 12:2)

  1. சிலுவை மரணம் ஒரு சாபத்தின் மரணம்.

“மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்.” (கலா 3:13)

“தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதை” (யோவா 12:33) அறிந்தும் அந்த மரணத்தை ருசிபார்த்த கிறிஸ்துவின் அன்பு எத்தனை பெரியது!

கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)