TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7சுவிசேஷம்ஜெபம்

இரட்சிக்கப்படாத நண்பர்களுக்காக ஜெபிப்பது எப்படி?

“கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து நான் வெட்கப்படேன்… விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.” ( ரோமர் 1:16 )

  1.  ஆண்டவர்  அவர்களை தம்மிடம் இழுத்துக்கொள்ளும்படி ஜெபியுங்கள்.

“என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்.” (யோவா 6:44)

  1.  அவர்களின் பாவத்தை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு உணர்த்தும்படி ஜெபியுங்கள் .

“அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.” (யோவா 16:8)

  1. அவர்களிடம் சுவிசேஷத்தை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்காக ஜெபியுங்கள்.

“கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,
திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.” (கொலோ 4:3-4)

  1. மற்றவர்களும் அவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளும்படி ஜெபியுங்கள்.

“அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.” (மத் 9:38)

  1. சுவிசேஷத்தின் சத்தியத்திற்கு அவர்களின் மனக்கண்கள் திறக்கப்படும்படி ஜெபியுங்கள்.

“கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.” (2 கொரி 4:4)

  1. சுவிசேஷத்தை கவனிக்கும்படி தங்கள் இருதயத்தை அவர்கள் திறந்து கொடுக்க ஜெபியுங்கள்.

“பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.” (அப் 16:14)

  1. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்பட ஜெபியுங்கள். 

“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.” (யோவா 1:12)

“கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.” (அப் 16:14)

– Vivekk7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)