TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
கட்டுரை

கொரோனா வைரஸ் vs வேதாகமம்

இக்கட்டுரையின் ஆசிரியர் சகோ. ஆ. திருமுருகன் அவர்கள்

கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பர்களுக்கு கிறிஸ்து இயேசுவின் ஈடு இணையில்லா நாமத்தில் எனது அன்பு வாழ்த்துக்கள். இன்று உலகையே பீதியில் ஆழ்த்தி நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கோவிட்-19 (COVID-19) என்னும் கொரோனா வைரஸின் தொற்றுநோயானது வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள கடைசிக்கால கொள்ளைநோய்கள் பற்றிய தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலா? அப்படியானால் கடைசிக் காலம் வந்துவிட்டதா? வாருங்கள் ஆராய்வோம்!

நாம் நமது வழக்கமாக முறையில் எழுப்பப்படுகின்ற ஒவ்வொரு கேள்வியையும் அலசி ஆராயும் விதத்தில் மிகவும் விளக்கமாக இந்தக் கேள்வியையும் ஆராய்வோம், ஆதலால் வைரஸ் என்றால் என்ன, சமீபத்தில் உலகை அச்சுறுத்திய வைரஸ்கள், பிறகு கொரோனா வைரஸ் போன்றவைகளை மேலோட்டமாக கண்டபின் வேதாகமப் பகுதிகளுக்கு சென்று ஒப்பீட்டு நிலையில் ஆராய்ந்து அதிலிருந்து சிதறுகின்ற சரியான சத்தியங்களை மட்டும் உறுதியாக பற்றிக்கொள்ளுவோம்! ஆகவே பதிவுகளின் எண்ணிக்கை கூடிப்போனாலும் சற்று நேரம் எடுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வாசித்து, தெளிவடையவும் மற்றும் பயன்பெறவும் வேண்டுமென்று கர்த்தரின் கிருபையைப் பற்றிக்கொண்டு ஜெபத்துடனே இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்!

வைரஸ் என்றால் என்ன?

வைரஸ் என்றால் என்ன? அவை எவ்வாறு பரவும்? போன்ற காரியங்கள் நம் குழுவிலுள்ள அநேகருக்கு அறிந்தவைகள்தான் என்கிறபோதிலும், அறியாதவர்கள் நலன் கருதி மணிச்சுருக்கமாக சிலவற்றைக் கூறிவிட்டு கொரோனாவைரஸுக்கு செல்லுகிறேன். பண்டைய காலத்திலிருந்தே வைரஸ்களின் ஆதிக்கம் மற்றும் அதற்கு எதிராக மனித இனத்தின் உயிர்போராட்டம் இருந்துகொண்டுதான் இருக்கின்றன என்கிறபோதிலும், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த 21ஆம் நூற்றாண்டை வெகுவாக அதிர வைத்த சில வைரஸ் தாக்குதல்கள் மற்றும் இப்போது கொரோனா போன்று அதிர வைத்து நம்மை கதிகலங்க வைக்கும் வைரஸ்கள் இருக்கின்றன என்பது தான் மிகவும் கவனிக்கத்தக்கது.

வைரஸ்கள் என்பது பூமியில் மிகவும் பொதுவான உயிரியல் உளதாய் இருக்கும் பொருட்கள் ஆகும். அவைகளில் சுமார் 10,000,000,000,000,000,000,000,000,000,000 வகைகள் இருப்பதாக அறிவியல் வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர், மேலும் அவை அனைத்தும் வரிசையாக இருந்தால் அவை விண்மீனின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் நீண்டு செல்லும் அளவிற்கு உள்ளதாகவும் கூறுகின்றனர் (Viruses are the most common biological entities on Earth. Experts estimate there are around 10,000,000,000,000,000,000,000,000,000,000 of them, and if they were all lined up they would stretch from one side of the galaxy to the other).

ஒருவேளை அவற்றை இயற்கையின் சொந்த நானோ தொழில்நுட்பம் என்று நீங்கள் நினைக்கலாம்: நானோமீட்டர் அளவிலான அளவுகளைக் கொண்ட மூலக்கூறு இயந்திரங்கள், பிற உயிரினங்களின் செல்களை ஆக்கிரமித்து, தங்களை இனப்பெருக்கம் செய்ய கடத்தப்படுவதற்கு அவை பொருத்தப்பட்டுள்ளன. பெரும்பான்மையானவைகள் மனிதர்களுக்கு பாதிப்பில்லாதவைகள் என்றாலும், சில உங்களை நோய்வாய்ப்படுத்தலாம், மேலும் சில மிகவும் கொடியவவைகளாவும் இருக்கலாம் (கொரோனாவைப் போல).

”வைரஸ்” என்னும் இந்த சொல்லை சமீப நாட்களாக அடிக்கடி நாம் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆம், அனைத்து ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் இதை ஃபிளாஷ் நியூஸாக கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறியவேண்டுமென்பதில்லை. சரி வாருங்கள் வைரஸை வரையறுப்போம்: ”வைரஸ் என்பது மிகச்சிறிய புரதங்கள் மற்றும் மரபணு பொருட்களை கொண்டதாகும்”. நாம் வாழும் இவ்வுலகில் எண்ணற்ற வைரஸ்கள் உள்ளன. வைரஸ் தொற்றால்தான் நமக்கு காய்ச்சல், சளி போன்றவைகள் ஏற்படுகிறது. 1960-ஆம் ஆண்டு உடலியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற சர் ஃபிராங்க் மக்ஃபார்லேன் பர்னெட் (Sir Frank Macfarlane Burnet) என்பவர் வைரஸ் குறித்து பின்வருமாறு கூறுகிறார்:

“வைரஸ் பெருக்கம் போன்ற ஒரு புதிய நிகழ்வு ஆய்வு செய்யப்படும்போது, செல்லுலார் வேதியியல் மற்றும் பிற வகை ஆய்விலிருந்து பெறப்பட்ட செயல்பாடு பற்றிய அனைத்து அறிவும் பொருத்தமற்றதாகிவிடும். ஒரு வைரஸ் என்பது காலத்தின் சாதாரண அர்த்தத்தில் ஒரு தனிப்பட்ட உயிரினம் அல்ல, ஆனால் இது கிட்டத்தட்ட உயிரியல் வடிவத்தின் நீரோடை என்று அழைக்கப்படலாம். ஒப்பீட்டளவில் மந்த வைரஸ் துகள்களால் இந்த முறையில் ஒரு செல்லிலிருந்து வேறொரு செல்லின் கலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது, ஆனால் ஒவ்வொரு தொற்றுநோயிலும் அதன் புரவலரிடமிருந்து புதிய வாழ்க்கையை இது இரவலாகப் பெறுகிறது.” (When a new phenomenon like virus multiplication comes to be studied, almost all the knowledge of cellular chemistry and function gained from other types of study turns out to be irrelevant. A virus is not an individual organism in the ordinary sense of the term but something which could almost be called a stream of biological pattern. The pattern is carried from cell to cell by the relatively inert virus particles, but it takes on a new borrowed life from its host at each infection.)

வைரஸ்கள் பரவுவது எப்படி?

சில வகையான வைரஸ்கள் நேரடியாக ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு பரவும். எச்.ஐ.வி. (HIV) போன்ற வைரஸ், பாதிக்கப்பட்ட நபரருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் பரவும். இந்த வைரஸ் தொற்று பரவுதலை மூன்றாக பிரிக்கலாம். எண்டமிக், எபிடமிக் மற்றும் பாண்டமிக் (Endemic, epidemic, and pandemic).

  • 1. ”எண்டமிக்” (Endemic) என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் எந்த நேரம் வேண்டுமாலும் பரவக்கூடிய வைரஸாகும். உதாரணமாக அம்மை போன்ற விஷயங்களை சொல்லலாம். அதே போல மலேரியா காய்ச்சலையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம், மலேரியா ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு தொடர்ச்சியான தாக்கத்தை கொடுத்துக்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது (Endemic: a disease that exists permanently in a particular region or population. Malaria is a constant worry in parts of Africa).
  • 2. ”எபிடமிக்” (Epidemic) என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இனமக்களிடையே அதிகமாக பரவக்கூடிய வைரஸ் நோயாக இருக்கும். உதாரணமாக மழைக்காலத்தில் பலருக்கும் காய்ச்சல் வரும். அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த வைரஸ் பரவுவது குறைந்துவிடும் (Epidemic: An outbreak of disease that attacks many peoples at about the same time and may spread through one or several communities.)
  • 3. ”பாண்டமிக்” (Pandemic) வகையை சேர்ந்த வைரஸ்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடியதாகும். ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணிக்கும்போது, அந்த குறிப்பிட்ட நாட்டில் வைரஸ் பரவக்கூடிய சூழல் இருந்தால், அது அங்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இப்பொழுது உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்த வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது (Pandemic: When an epidemic spreads throughout the world.)

21-ஆம் நூற்றாண்டில் ஒரு சில வைரஸ் தாக்குதலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கே சுருக்கமாக, இதில் மிகுந்த கவனம் பெற்று, பல உயிர்களை வாரிக்கொண்ட வைரஸ்கள் குறித்து பார்க்கலாம்:

”இபோலா வைரஸ்” (EBOLA Virus)

மனிதக்குரங்குகள், பழந்திண்ணி வௌவால்கள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கும் வேகமாக பரவக்கூடியதுதான் இந்த இபோலா வைரஸ். 1976-ஆம் ஆண்டு முதன்முதலில் தற்போதைய தென் சூடான் பகுதியிலும், காங்கோ குடியரசு நாட்டிலும் இபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. காங்கோ குடியரசில் இபோலா என்ற நதி அருகே உள்ள ஒரு கிராமத்தை இந்த வைரஸ் தாக்கியதால்தான் இதற்கு ”இபோலா வைரஸ்” என்று பெயரிடப்பட்டது.

லைபீரியா, கினியா மற்றும் சியாரா லியோனில் 2013 முதல் 2016 வரை பரவிய இபோலா வைரஸ் தொற்றால் ஏறக்குறைய 11,300 பேர் கொல்லப்பட்டனர். பிறகு 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில் மீண்டும் ஏற்பட்ட இபோலா தொற்று, மத்திய ஆப்பிரிக்காவில் ஏறக்குறைய 1,800 பேரை கொன்றது. அப்போதைய சூழலை பொது சுகாதார நெருக்கடி நிலையாக உலக சுகாதார அமைப்பு (WHO – WORLD HEALTH ORGANIZATION) அறிவித்தது.

திடீர் காய்ச்சல், கடுமையான உடல் சோர்வு, தசை வலி மற்றும் தொண்டை வலி இதன் அறிகுறிகள். நீர்சத்து இழப்பு மற்றும் உறுப்பு செயலிழப்பின் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்டது. நிரூபிக்கப்பட்ட ஒரு முடிவான தீர்வு அல்லது சிகிச்சை என்று இந்த இபோலா வைரஸிற்கு இதுவரையில் ஏதுமில்லை. இதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் இன்னும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

”சார்ஸ்” (SARS)

21-ஆம் நூற்றாண்டின் மோசமான நோயாகவும், உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்பட்டது தான் “சார்ஸ்”. Severe Acute Respiratory Syndrome என்பதுதான் சார்ஸ் என்பதன் முழுமையான பொருள். தீவிர சுவாசப் பிரச்சனைக்கான நோய்க்குறி என்று அர்த்தம் கொண்டிருக்கிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பும் கவலை தெரிவித்திருந்தது. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய சார்ஸ் வைரஸ், கொரோனா வைரஸ் வகையை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2002-ஆம் ஆண்டு தென் சீனாவில் உள்ள குவாங்டாங்க் மாகாணத்தில்தான் முதன்முதலில் இந்த தொற்று கண்டறிப்பட்டது. அதனைத் தொடர்ந்து 26 நாடுகளில் 8,000க்கும் மேற்பட்டோருக்கு சார்ஸ் பாதிப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பின் வலைதளம் அதிகாரப்பூர்வமாக கூறுகிறது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் உடல்நடுக்கம் போன்றவைகள் இதன் அறிகுறிகள் ஆகும். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட இரண்டாம் வாரத்தில் இருமல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு, தீவிரமான சுவாசக் கோளாறில் இது முடியும்.

சார்ஸ் பரவுவது குறித்தும், இதனை கட்டுப்படுத்தவது குறித்தும் உலக சுகாதார அமைப்பு 2003-ஆம் ஆண்டு ஜெனீவாவில் உலக நாடுகளுடன் ஒரு சந்திப்புக் கூட்டம் நடத்தியது. சார்ஸ் வைரஸால் சீனாவில் மட்டும் 774 பேர் உயிரிழந்தனர். இதில் மருத்துவர்களும் அடங்குவர். அதுமட்டுமின்றி அன்றே இதனை கட்டுப்படுத்த தவறியதாக சீனாவை ஜ.நா விமர்சித்தது. தற்போது வரை இதற்கு எந்த சிகிச்சையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

”ஸிகா வைரஸ்” (Zika Virus)

ஏடஸ் (Aedes) எனப்படும் கொசு வகை கடிப்பால் ஸிகா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இந்த கொசு பகல் நேரத்தில் கடிக்கக் கூடியதாகும். முதன் முதலில் உகாண்டாவில் 1947-ல் குரங்குகளிடம் இந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1952-ல் உகாண்டா மற்றும் தான்சானியாவில் மனிதர்களிடம் இந்த தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் 2007-ஆம் ஆண்டுதான் மைக்ரொனீசியாவில் உள்ள யாப் எனும் தீவில் இந்த வைரஸ் தொற்று பதிவாகியது. அதனை தொடர்ந்து 2013-ல் பிரெஞ்சு பாலினீசியா மற்றும் பசிபிக் எல்லையில் உள்ள மற்ற நாடுகளில் ஸிகா வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை தாக்கியது.

2015-ல் பிரேசிலில் இந்த வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை உண்டாக்கியது. கொசுவில் இருந்து பரவக் கூடிய ஸிகா வைரஸ் தொற்று, இதுவரை 86 நாடுகளில் பதிவாகியிருக்கிறது. இந்த ஏடஸ் (Aedes) கொசு வகைதான் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களையும் பரப்புகிறது. காய்ச்சல், தடிப்பு, தசை மற்றும் மூட்டு வலி, தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். ஸிகா வைரஸிற்கு இதுவரை எந்த சிகிச்சையும் கிடையாது.

”நிபா வைரஸ்” (Nipah Virus)

நிபா வைரஸின் தொற்று விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும் வைரஸாகும். இதன் பிறப்பிடம் ஃப்ரூட் பாட்ஸ் (Fruit Bats) எனப்படும் பழந்தின்னி வௌவால்கள் ஆகும். 1998-ஆம் ஆண்டு முதன்முதலில் மலேசியாவில் இந்த வைரசால் நோய் தொற்று ஏற்பட்டது. வௌவால்களிடம் இருந்து பன்றிகளுக்கு இந்த நோய் பரப்பப்பட்டது. 2004-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் பழந்தின்னி வௌவால்கள் கடித்த பனையை சாப்பிட்ட மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவியது. அதுமட்டுமின்றி, ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதும் கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் தொற்றால் கடுமையான சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படலாம் என்பது கண்டறியப்பட்டது. இந்தியாவிலுள்ள கேரளா மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டு நிபா வைரஸ் பரவிய போது, 17 பேர் உயிரிழந்தனர் என்பது நம்மில் அநேகர் அறிந்ததே. முக்கியமாக கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இது பரவியது.

நிபா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் மனிதர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும். காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்ட வலி ஆகியவை இதன் அறிகுறிகள். மேலும் மயக்கம், நரம்பு பிரச்சனைகளும் ஏற்படலாம். இந்த வைரஸிற்கு தற்போது வரை எந்த தடுப்பூசியும் கிடையாது.

”மெர்ஸ்” (MERS)

மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (Middle East Respiratory Syndrome) என்பது சுருக்கமாக மெர்ஸ்” (MERS) என்று அறியப்படுகிறது. இது ஒரு வைரஸால் இன்னும் குறிப்பாக, ஒரு கொரோனா வைரஸ் மூலம் பரவுகிற நோயாகும், அதனால் இந்த நோய் “மெர்ஸ்-கோவ்” (MERS-CoV) என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலான மெர்ஸ் நோயாளிகள் காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் அறிகுறிகளுடன் கடுமையான சுவாச நோயை அடைகின்றனர். MERS பாதிக்கப்பட்டு பதிவான ஒவ்வொரு 10 நோயாளிகளில் 3 அல்லது 4 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நோய் பாதிக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் அரேபிய தீபகற்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. சுகாதார அதிகாரிகள் முதலில் செப்டம்பர் 2012 இல் சவூதி அரேபியாவில் இந்த நோயைப் பற்றிய அறிக்கையை கொடுத்தனர். பின்னாட்களில் நடைபெற்ற விசாரணைகள் மூலம், மெர்ஸின் முதல் அறியப்பட்ட வழக்குகள் ஏப்ரல் 2012 இல் ஜோர்டானில் நிகழ்ந்தன என்பதை அவர்கள் பின்னர் கண்டறிந்தனர். இதுவரை, மெர்ஸின் அனைத்து வழக்குகளும் அரேபிய தீபகற்பத்தில் மற்றும் அதற்கு அருகிலுள்ள நாடுகளுக்கு பயணம் செய்யும் கணக்கோடு இணைக்கப்பட்டதாக உள்ளன. அரேபிய தீபகற்பத்திற்கு வெளியே MERS இன் மிகப்பெரிய பாதிப்பு 2015 இல் கொரியா குடியரசில் ஏற்பட்டது நாம் அறிந்ததே. இந்த பதிப்பு அரேபிய தீபகற்பத்திலிருந்து நாடு திரும்பிய ஒரு பயணியுடன் தொடர்புடையது என்றும் கண்டறியப்பட்டது.

”கொரோனா வைரஸ்”

கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 என்றால் என்ன? என்பதை நாம் முதலாவதாக தெரிந்துகொள்ள வேண்டும். கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும். மனிதர்களில் இந்த கொரோனா வைரஸ் சளி முதல் சார்ஸ் வரையில் உண்டாக்கக்கூடியவை. தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளனர். இந்த தொற்று சமீபமாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இது விஞ்ஞானிகளால், சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கோவிட் 19 முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.

இந்த கோவிட் 19 தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம். பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக ஐந்து நாட்களில் தெரியலாம என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென்படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது.

2003 ஆம் ஆண்டில் சீனாவில் “சார்ஸ்” (SARS) மற்றும் 2012 முதல் “மெர்ஸ்” (MERS) ஆகியவற்றின் கொடிய பாதிப்புகளுக்கு பிற கொரோனா வைரஸ்கள் காரணமாக இருந்தன. இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு பரவ அனுமதிக்கும் வழிகளில் ஒப்பீட்டளவில் அடிக்கடி மாறுகின்றன என்பதும் கண்டறியப்பட்டது (Other coronaviruses were responsible for deadly outbreaks of Serious Acute Respiratory Syndrome (SARS) in China in 2003 and Middle East Respiratory Syndrome (MERS) from 2012. These viruses mutate relatively often in ways that allow them to be transmitted to humans).

ஆக, கொரோனா வைரஸ்கள் (CoV) என்பது வைரஸின் ஒரு பெரிய குடும்பமாகும், இது பொதுவான சளி முதல் மெர்ஸ்-கோவ் (MERS-CoV) மற்றும் சார்ஸ்-கோவ் (SARS-CoV) போன்ற நோய்களுக்கு காரணமாகிறது. ஒரு நாவல் கொரோனா வைரஸ் (nCoV) என்பது மனிதர்களில் முன்னர் அடையாளம் காணப்படாத ஒரு புதிய திரிபு ஆகும் (Coronaviruses (CoV) are a large family of viruses that cause illness ranging from the common cold to more severe diseases such as Middle East Respiratory Syndrome (MERS-CoV) and Severe Acute Respiratory Syndrome (SARS-CoV). A novel coronavirus (nCoV) is a new strain that has not been previously identified in humans).

கொரோனா வைரஸ்கள் ஜூனோடிக் ஆகும், அதாவது அவை விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் பரவுகின்றன. விரிவான விசாரணையில் SARS-CoV சிவெட் பூனைகளிலிருந்து மனிதர்களுக்கும், MERS-CoV ட்ரோமெடரி ஒட்டகங்களிலிருந்து மனிதர்களுக்கும் பரவியது கண்டறியப்பட்டது. அறியப்பட்ட பல கொரோனா வைரஸ்கள் இதுவரை மனிதர்களைப் பாதிக்காத விலங்குகளில் புழக்கத்தில் உள்ளன (Coronaviruses are zoonotic, meaning they are transmitted between animals and people. Detailed investigations found that SARS-CoV was transmitted from civet cats to humans and MERS-CoV from dromedary camels to humans. Several known coronaviruses are circulating in animals that have not yet infected humans).

நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகள் யாதெனில், சுவாச அறிகுறிகள், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கஷ்டங்கள் ஆகியவை அடங்கும். மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களில், தொற்று நிமோனியா, மிகவும் கடுமையான சுவாச நோய்க்குறி, சிறுநீரக செயலிழப்பு மற்றும் இறுதியில் மரணத்தைக் கூட ஏற்படுத்தும் (Common signs of infection include respiratory symptoms, fever, cough, shortness of breath and breathing difficulties. In more severe cases, infection can cause pneumonia, severe acute respiratory syndrome, kidney failure and even death).

தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான நிலையான பரிந்துரைகள் யாதென்றால், வழக்கமான கைகளைக் கழுவுதல், இருமல் மற்றும் தும்மும்போது வாய் மற்றும் மூக்கை மூடுவது, இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைப்பது, இறுதியில் இருமல் மற்றும் தும்மல் போன்ற சுவாச நோயின் அறிகுறிகளைக் காட்டும் யாருடனும் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பது போன்றவைகளாகும்.

கொரோனா ஏற்பட்டால் இறப்பு நிச்சயமா?

கொரோனா தொற்று குறித்த அச்சம் பரவலாக இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவே. ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே இறப்பு விகிதம் என தற்போது கூறப்படுகிறது. ஆனால் அதை உறுதியாக கூற முடியவில்லை என்பதும் பல்வேறு மருத்துவர்களின் கருத்து. ஏறக்குறைய 56,000 கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்தது; அதில் கண்டறிந்தவைகள் இதோ:

▪6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு – நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.

▪14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. அதாவது சுவாசிப்பதில் சிரமம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை போன்றவை.

▪80% பேருக்கு மிதமான அறிகுறிகள் அதாவது காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.

சிறு குழந்தைகள், வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கொரோனாவை குணப்படுத்த முடியுமா? என்று கேட்போமானால், தற்சமயம் கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து இல்லை என்பதுதான் உண்மை. இருப்பினும் ஆய்வாளர்கள் மருந்து கண்டுபிடித்து விலங்குகளில் சோதனை செய்து வருகின்றனர் அது சரியாக இருந்தால் பின்பு மனிதர்களிடத்தில் சோதனை செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்தாலும் அது அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பது அடுத்த கவலை. கோவிட்-19 வைரஸ் என்பதால் ஆண்டி பாக்டீரியல் மருந்து அதாவது பாக்டீரியாவை அழிக்கும் மருந்து இதற்கு செயல்படாது.

தற்காத்துக்கொள்ளுதல்

கொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி நன்றாக கைகளை சுத்தம் செய்வது என்று அதாவது சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள் என்று உலக நாடுகளின் அரசுகள் அவர்களது ஜனங்களை அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்த கொரோனா எங்கிருந்து வந்தது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன், அதாவது SARS-COV-2 வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள விலங்குகள் சந்தையிலிருந்து, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எந்த விலங்கு என்று இன்னும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வெளவால்கள் மூலம் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த கொரோனா தொற்று எவ்வாறு பரவுகிறது? என்பதைக் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும்போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம் என்றும் இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ஆதலால், இரும்பும் போதோ அல்லது தும்மலின் போதோ டிஷ்யூ வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தை தொடக்கூடாது. மேலும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தள்ளி இருத்தல் வேண்டும். கவனிக்கவும்: பாதிக்கப்பட்டவர்களின் மலத்திலிருந்து இந்த வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் உலக சுகாதார அமைப்பு கொரோனாவிலிருந்து உங்களை எவ்வாறு காத்துக் கொள்ளலாம்? என்று சில காரியங்களை தங்கள் இணையதளத்தில் பதிவிட்டிருக்கின்றன. அது யாதெனில், உங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவுங்கள். உங்கள் கைகளின் அனைத்து பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள். சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். உங்கள் கண்கள், மூக்குகள், மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள் (ஏனென்றால் அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும்).

நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள். கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள். டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள். கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள். காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.

உங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்றால்…

நீங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்திருந்தாலோ அல்லது பயணம் செய்தவருடன் தொடர்பில் இருந்தாலோ, விட்டிலேயே இருங்கள். குறிப்பாக உங்களுக்கு லேசாக ஏதேனும் அறிகுறி இருந்தாலோ அது சரியாகும் வரை பிறருடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். மாஸ்க் (முகக்கவசம்) அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் மருத்துவரிடம் சென்றாலும் அது முழுமையாக உறுதிப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் வைரஸ் தொற்று ஏற்பட்டு அது அறிகுறிகள் காட்டுவதற்கு குறைந்தது 14 நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. உங்கள் மாநில கொரோனா உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அதன் பின் சுகாதார அதிகாரிகள் உங்களின் மாதிரிகளை சேகரிப்பர். இந்தியாவில் தற்போது 15 சோதனை ஆய்வகங்கள் உள்ளன. உங்களுக்கு தொற்று இருப்பது தெரிந்தால் நீங்கள் தனிமை வார்டில் சிகிச்சை பெறுவீர்கள், பயப்படத்தேவையில்லை.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுபரவலை தடுப்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது. நாம் முன்னமே கண்டதுபோல, பாண்டமிக் (Pandemic) என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றாகும். அந்த வகையில்தால் இந்த கொரோனா இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கூறும்போது, வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் நிலையின் ஆபத்தை விவரிக்கவே இந்த பதம் இப்போது பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சில நாடுகள் கட்டுப்படுத்தும் திறன் இல்லாமலும், வளம் இல்லாமலும், பிரச்சனைகளை தீர்க்க முடியாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன என்கிறார்.

எனவே உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளிடமும், உடனடி சிகிச்சை தரும் முறையை உயர்த்தவும், மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றி கொள்ளும் முறை குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கவும், கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19-ஆல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, சோதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் எடுத்துரைப்பதாக கூறியுள்ளது.

கொரோனாவும் இந்தியாவும்

சீனாவிற்குப் பிறகு உலகில் அதிக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு நம் இந்தியாதான் என்பது உங்களுக்கே தெரியும், கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவினால் அதைச் சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறதா? என்று பார்ப்போமானால், ஏற்கெனவே 3,000 பேருக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்ட, 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ள சுவாச மண்டலம் தொடர்பான இந்த வைரஸ் தாக்குதல் நோயை சமாளிக்க உலகில் ஆயத்தமான முதல் வரிசை நாடுகளில் நாம் உள்ளதாக இந்தியா கூறுகிறது.

இந்த வைரஸ் பாதிப்பால் முதலாவது மரணத்தை சீன அரசு ஊடகங்கள் உறுதி செய்த ஆறு நாட்களில், உலக அளவிலான சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு (WHO) பிரகடனம் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, ஜனவரி 17 ஆம் தேதியிலிருந்தே விமான நிலையங்களில் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் கூறியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

அருகில் உள்ள நேபாளத்துடன் சர்வதேச எல்லையை பகிரும் ஐந்து மாநிலங்களில் எல்லைப் பகுதியில் வாழும் 27,000-க்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் 10 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வருபவர்களைப் பரிசோதிப்பதற்காக, ஈரானில் ஓர் ஆய்வகத்தை இந்தியா அமைக்கிறது. இந்த வார இறுதிக்குள் இந்தியா முழுக்க 34 பரிசோதனை நிலையங்களில் இந்த வைரஸ் பரிசோதனை வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த வைரஸ் தீவிரமாகப் பரவ நேரிட்டால் நிலைமையை எப்படிக் கையாள்வது என்று சுகாதாரத் துறை அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும், அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வார்டு வசதிகள் உருவாக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நோய்கள் பரவுகின்ற வழிகள்

கீழ்க்கண்ட மூன்று நிலைகளில் நோய்கள் பொதுவாக மனிதர்களிடையே பரவுகின்றன:

  1. “மனிதர்கள்”: துளி தொற்று (அதாவது நமக்கிருக்கும் இருமல், தும்மல் போன்றவைகள் மூலம்), நேரடி தொடர்பு (முத்தம்), மற்றும் மறைமுக தொடர்பு போன்றவைகளின் மூலமாக மனிதர்கள் மூலம் மனிதர்களிடையே பரவுகிறது (Droplet infection (coughing, sneezing), direct contact (kissing), indirect contact).
  2. “விலங்குகள்”: கி.பி. 1348-ல் உண்ணிகள் மற்றும் எலிகள் மூலமாக புபோனிக் பிளேக் என்னும் நோய் பரவினது. இதனால் மூன்றில் ஒரு பங்கு ஐரோப்பா இறந்தது! (அதாவது ஏறக்குறைய 20 மில்லியன் மக்கள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது) ஆப்பிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் கொசுக்கள் மலேரியாவை பரப்பின. உண்ணிகள் லைம் நோயை பரப்புகிறது அதுபோல வாத்துகள் மற்றும் பன்றிகள் மூலமும் காய்ச்சல் உண்டாகும் வைரஸ்கள் பரவுகின்றன (Fleas and rats spread the bubonic plague in 1348. 1/3 Europe died! Mosquitoes in Africa and Latin America spread malaria. Ticks spread Lyme disease. Ducks and pigs can carry flu viruses.)
  3. “உயிரற்ற ஆதாரங்கள்”: அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரில் நோய் பரவுகிறது. உதாரணமாக, சால்மோனெல்லாவை இறைச்சியில் காணலாம். அதுபோலவே அபாயகரமான இரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் (Disease can be transmitted in contaminated food and water. For instance, salmonella can be found in meat. Hazardous chemicals can cause cancers.)

(குறிப்பு: மேற்கண்ட கொரோனா குறித்த பெரும்பாலான தகவல்கள் https://www.who.int/ மற்றும் https://www.cdc.gov/ ஆகிய இணையதளங்களிலிருந்து எடுக்கப்பட்டதாகும். இந்த கொரோனாவைரஸ் குறித்து மட்டுமின்றி பிற வைரஸ்கள் மற்றும் நோய்கள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு இந்த இரு இணையதளங்களும் போதுமான மற்றும் சரியான தகவல்களை கொண்டுள்ளன, ஆகவே இந்த தளங்களுக்கு சென்று நீங்கள் அவைகளை அறிந்துகொள்ளலாம்.)

சரி இனி நாம் அடுத்த விஷயத்திற்கு வருவோம். அதாவது நமது கேள்வியில், இன்று உலகையே பீதியில் ஆழ்த்தி நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கோவிட்-19 (COVID-19) என்னும் கொரோனா வைரஸின் தொற்றுநோயானது வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள கடைசிக்கால கொள்ளைநோய்கள் பற்றிய தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலா? அப்படியானால் கடைசிக் காலம் வந்துவிட்டதா? என்று கேட்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் தீர்க்கதரிசனம்

கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே, குறிப்பாக சீனாவிலுள்ள ஊஹானில் கொரோனா மளமளவென்று மனிதர்களுக்கு தொற்றி மரணத்தை ஏற்படுத்த தொடங்கிய நாளிலிருந்து நமது உள்ளூர் பாஸ்டர்கள் மற்றும் சர்வேதேச பாஸ்டர்கள்/தீர்க்கதரிசிகள் என பலர் பல்வேறு தீர்க்கதரிசனம் உரைக்கவும் மற்றும் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் இதுதான் என கணிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். அதாவது கடைசிக் காலத்தில் இதுபோன்ற பரவலான தொற்றுநோய்கள் இருக்கும் என்று பைபிள் தீர்க்கதரிசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன என்று மத்தேயு 24:7; லூக்கா 21:11 மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் 6:1-8 ஆகிய வசனங்களை மேற்கோள் காட்டுகிறார்கள். இந்த வசனங்களுக்குள்ள விளக்கத்தை பின்பு தெளிவாக ஆராய்வோம் இப்பொழுது இந்த வசனங்களை கவனியுங்கள்:

”ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.” (மத்தேயு 24:7)

“பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.” (லூக்கா 21:11)

“அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது. (வெளி. 6:7-8)

“தொற்று நோய்கள்: வேதாகமம் என்ன சொல்லுகிறது?”

தொற்று நோய்கள் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்று ஆராய்வோம் வாருங்கள். எபோலா அல்லது கொரோனா வைரஸ் போன்ற தொற்றுநோய்களின் பல்வேறு பாதிப்புகள், தேவன் ஏன் தொற்றுநோய்களை அனுமதிக்கிறார் அல்லது ஏற்படுத்துகிறார் என்பதையும், இதுபோன்ற நோய்கள் இறுதி காலத்தின் அடையாளமா என்றும் கேட்க பலரைத் தூண்டியுள்ளது (Various outbreaks of pandemic diseases, such as Ebola or the coronavirus, have prompted many to ask why God allows—or even causes—pandemic diseases and whether such illnesses are a sign of the end times). வேதாகமத்தில் அதுவும் குறிப்பாக பழைய ஏற்பாட்டில், தேவன் தம்முடைய ஜனங்கள் மீதும் அவருடைய எதிரிகள் மீதும் “அவரது வல்லமையை விளங்கப்பண்ணும் பொருட்டாக” அநேக வாதைகளையும் நோய்களையும் கொண்டுவந்த பல சந்தர்ப்பங்களை விவரிக்கிறது (யாத்திராகமம் 9:14, 16). இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்படி பார்வோனை வற்புறுத்துவதற்காக அவர் எகிப்தில் பத்து வாதைகளைப் பயன்படுத்தினார், அதே நேரத்தில் அவருடைய ஜனங்களை அந்த வாதைகளுடைய பாதிப்பிலிருந்து காப்பாற்றினார் (யாத்திராகமம் 12:13; 15:26), இது நோய்கள் மற்றும் பிற துன்பங்கள் மீதான தேவனுடைய இறையாண்மையைக் குறிக்கிறது (He used plagues on Egypt to force Pharaoh to free the Israelites from bondage, while sparing His people from being affected by them, thus indicating His sovereign control over diseases and other afflictions).

வாதைகள் உட்பட கீழ்ப்படியாமையின் விளைவுகளைப் பற்றி தேவன் தம் ஜனங்களுக்கு எச்சரித்தார் (லேவியராகமம் 26:21, 25). குறிப்பாக இரண்டு சந்தர்ப்பங்களில், தேவன் ஏறக்குறைய 14,700 ஜனங்களையும் மற்றும் 24,000 பேரையும் பல்வேறு கீழ்ப்படியாமை செயல்களுக்காக அழித்தார் (எண்கள் 16:49 மற்றும் 25:9) என்று வாசிக்கிறோம். மோசேயின் மூலமாக நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தபின், அவருக்கு கீழ்ப்படிதல் அல்லது எபோலாவைப் போன்ற ஏதாவது ஒரு வாதையினால் பல தீமைகளை அனுபவிக்கும்படி தேவன் ஜனங்களுக்குக் கட்டளையிட்டார்: “கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும் உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும்” (உபாகமம் 28:22). கடவுள் ஏற்படுத்திய அல்லது கொண்டுவந்த பல வாதைகளுக்கும் நோய்களுக்கும் இவைகள் சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.

நம்முடைய அன்பான, இரக்கமுள்ள தேவன் தம்முடைய மக்கள்மீது இத்தகைய கோபத்தையும் சினத்தையும் காட்டுகிறார் என்று கற்பனை செய்வது சில நேரங்களில் நமக்கு கடினம் தான். ஆனால் தேவனுடைய தண்டனைகள் எப்போதும் மனந்திரும்புதல் மற்றும் மீட்டெடுக்கும் குறிக்கோளைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2 நாளாகமம் 7:13-14-ல் தேவன் சாலொமோனிடம், “நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள்ளே கொள்ளைநோயை அனுப்பும்போது, என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்” என்று கூறுகிறார். கடவுள் தம் ஜனங்களை தன் பக்கம் இழுக்கவும், மனந்திரும்புதலை கொண்டுவரவும், அவர்கள் தங்கள் பரலோகத் தகப்பனுக்கு பிள்ளைகளாக அவரிடம் வர வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்டுவர பேரழிவைப் பயன்படுத்துவதை இங்கே காண்கிறோம் (Here we see God using disaster to draw His people to Himself, to bring about repentance and the desire to come to Him as children to their heavenly Father).

புதிய ஏற்பாட்டிற்கு வரும்போது, இயேசு “ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்” என்றும் அதுபோலவே “அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” என்றும் காண்கிறோம் (மத்தேயு 9:35; 10:1; மாற்கு 3:9). தேவன் தம்முடைய வல்லமையை இஸ்ரவேலருக்கு விளங்கப்பண்ணும் பொருட்டாக வாதைகளையும் நோயையும் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தது போலவே, இயேசு மெய்யாகவே தேவனுடைய குமாரன் என்பதை நிரூபணம் செய்யும்பொருட்டு அதே வல்லமையை விளங்கும்படிச் செய்தார் (Just as God chose to use plagues and disease to show His power to the Israelites, Jesus healed as an exhibition of the same power to verify that He was truly the Son of God). தமது சீஷர்களின் ஊழியத்தை உறுதிபடுத்தும் வகையில் அதே குணப்படுத்தும் வல்லமையை இயேசு அவர்களுக்கு கொடுத்தார் (லூக்கா 9:1). தேவனானவர் இன்றும் தமது சொந்த நோக்கங்களுக்காக நோயை அல்லது வாதையை அனுமதிக்கிறார் என்பது மெய்தான், அதேவேளையில் சில நேரங்களில் வாதை அல்லது நோய், உலகளாவிய தொற்றுநோய்களும் கூட பாவத்தில் வீழ்ந்துபோன சாபத்திற்குள்ளான உலகில் வாழ்வதன் விளைவாகும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும் (God still allows sickness for His own purposes, but sometimes disease, even worldwide pandemics, are simply the result of living in a fallen world). ஒரு தொற்றுநோய்க்கு ஒரு குறிப்பிட்ட ஆவிக்குரிய காரணம் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க எந்தஒரு குறிப்பிட்ட வழியும் இல்லை, ஆனால் தேவன் எல்லாவற்றிலும் தமது சர்வ இறையாண்மை கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும் (ரோமர் 11:36); அதுமட்டுமின்றி அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும் (ரோமர் 8:28).

இப்படியிருக்க எபோலா மற்றும் கொரோனா வைரஸ் போன்ற நோய்களின் பரவலானது இனி கடைசி காலத்தில் வரப்போகிற தொற்றுநோய்களின் ஒரு முன்னறிவிப்பாகும், இது இறுதி காலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் எனவும் கருதலாம் (The spread of sicknesses such as Ebola and the coronavirus is a foretaste of pandemics that will be part of the end times). கடைசி காலத்துடன் தொடர்புடைய இனிவரும் எதிர்கால வாதைகளைக் குறித்துதான் இயேசு இவ்வுலகில் இருக்கும்போது குறிப்பிட்டார் (மத்தேயு 24:7; லூக்கா 21:11). மேலும் வெளிப்படுத்துதல் 11-ல் காண்கிற இரு சாட்சிகளுக்கும் “தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச்சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு” என்று வாசிக்கிறோம் (வெளிப்படுத்துதல் 11:6). அதுபோலவே வெளிப்படுத்துதல் 16-ல் விவரிக்கப்பட்டுள்ள இறுதியான, மிகவும் கடுமையான நியாயத்தீர்ப்புகளின் வரிசையில் ஏழு தேவதூதர்கள் பூமியின்மேல் ஊற்றுகிற ஏழு கோபகலசங்களை குறித்து வாசிக்கிறோம்.

இன்று நாம் காண்கின்ற தொற்றுநோய்களின் தோற்றம் இனிவரும் தேவனுடைய குறிப்பிட்ட பாவத்திற்கான நியாயத்தீர்ப்புடன் பிணைக்கப்படலாம் அல்லது இணைக்கப்படாமலும் இருக்கலாம். அதேசமயம் பாவத்தில் வீழ்ந்துபோன உலகில் வாழ்ந்ததன் விளைவாகவும் இது இருக்கலாம் (The appearance of pandemic diseases may or may not be tied to God’s specific judgment of sin. It could also simply be the result of living in a fallen world). இயேசு மீண்டும் திரும்பி வருகிற நேரம் யாருக்கும் தெரியாததால், நாம் இறுதி காலங்களில் வாழ்கிறோம் என்பதற்கு உலகளாவிய தொற்றுநோய்கள் சான்றாகும் என்று சொல்வதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் (Since no one knows the time of Jesus’ return, we must be careful about saying global pandemics are proof that we are living in the end times). இயேசு கிறிஸ்துவை இரட்சகராக அறியாதவர்களுக்கு, இந்த பூமியில் உள்ள வாழ்க்கை குறைவானது, எந்த நேரத்திலும் அவர்கள் மரணத்தை தழுவி இழக்கப்படலாம் என்பதற்கான ஒரு நினைவூட்டலாக இந்த நோய்கள் யாவும் இருக்க வேண்டும். தொற்றுநோய்களை எவ்வளவு பயங்கரமானதாக மற்றும் மோசமானது என்று எண்ணுகிறோமோ, அதைவிட பலமடங்கு நரகம் மோசமாக இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எவ்வாறாயினும், கிறிஸ்துவின் இரத்தம் நமக்காக சிலுவையில் சிந்தப்பட்டதால், இரட்சிப்பின் உறுதி மற்றும் நித்திய நம்பிக்கையை கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டிருக்கிறோம் (ஏசாயா 53:5; 2 கொரிந்தியர் 5:21; எபிரெயர் 9:28).

சரி இப்படிப்பட்ட தொற்று நோய்களுக்கு கிறிஸ்தவர்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? முதலில், நாம் பீதி அடையக் கூடாது. தேவன் எல்லாவற்றையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஏறக்குறைய 366 முறை (லீப் வருடம் உட்பட) “பயப்பட வேண்டாம்” என்று வேதாகமம் நமக்கு அறிவுறுத்துகிறது. அடுத்தபடியாக, இதுபோன்ற சமயங்களில் நாம் புத்திசாலித்தனமாக இருக்கவேண்டும். நோய் வெளிப்படுவதைத் தவிர்க்கவும், உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கவும் பாதுகாப்பு வழங்கவும் நியாயமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அடுத்தபடியாக, இதுபோன்ற தருணங்களில் உங்களுக்கு தேவன் கொடுத்த ஊழியத்தை முறையாக நிறைவேற்ற ஊழியத்திற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள். பெரும்பாலும் மக்கள் தங்கள் உயிருக்கு பயப்படுகையில், அவர்கள் நித்தியத்தைப் பற்றி உரையாட அதிக விருப்பம் காட்டுவார்கள். நீங்கள் நற்செய்தியைப் பகிர்வதில் தைரியமாகவும் இரக்கமாகவும் இருங்கள், எப்போதும் அன்புடன் சத்தியத்தை பேசுங்கள் (எபேசியர் 4:15).

”தொற்றுநோயின் கோரம்”

மாபெரும் சங்காரத்தினால் அல்லது வாதையினால் ஐயோ! எல்லாம் போச்சே, என்று கதறி அழும் ஓலம் கேட்கும்போது, நமது பதில் என்ன? இப்படிப்பட்ட தொற்று நோய்களுக்கு கிறிஸ்தவர்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? இதுவரை, கொரோனா வைரஸ் குறித்து நாம் கேட்டவைகள் மற்றும் அனுபவித்தவைகள் மெய்யாகவே நமக்கு சங்கடத்தை உண்டுபண்ணுகின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரித்தவர்களுக்காக நமது மனது உருகுகிறது இயல்புதான்.

செய்தி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் குறிப்பாக இந்த விஷயத்தில் உதவியாக இல்லை. சிலருக்கு, இது உலகின் முடிவு (அல்லது கழிப்பறை காகிதம் மற்றும் கை சுத்திகரிப்பானின் விலையை உயர்த்த குறைந்தபட்சம் ஒரு சிறந்த நேரம்). மற்றவர்களுக்கு, இது ஒரு போலி செய்தி, கோவிட்-19 (COVID-19) ஒரு மோசமான குளிரை விட சற்று அதிகம் அவ்வளவுதான் என்று ஏதோ என்னமோ என்று போய்கொண்டிருக்கிற நிலை. உண்மை வழக்கம் போல், இடையில் எங்காவது இருக்கலாம்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் இறுதி காலத்தின் அடையாளமா?

கடைசி காலங்களில் நோயும் கொள்ளைநோயும் ஏற்படும் என்று வேதாகமம் சொல்லுகிறது (மத்தேயு 24:7; லூக்கா 21:11; வெளிப்படுத்துதல் 6:8). ஆனால், கொரோனா வைரஸ் என்பது இறுதி காலத்தின் உண்மையான அறிகுறியா, அல்லது இறுதி காலங்களில் என்ன நடக்கும் என்பதற்கான முன்னோடியா என்பதை அறிய எந்த ஒரு வழியும் இல்லை (there is no way to know if the coronavirus is an actual sign of the end times, or just a precursor to what will occur in the end times). இது ஒரு முன்னோடியாக இருக்கலாம் என்பது நமது ஒரு தனிப்பட்ட உணர்வு அவ்வளவுதான். ஆனால் வெளிப்படுத்துதல் 6:8 விவரிக்கும் காரியம் நாம் தற்போது அனுபவித்து வருவதை விட பலமடங்கு மோசமானது ஆகும்.

கிறிஸ்தவர்கள் உணவு, மருந்து மற்றும் துப்புரவுப் பொருட்களை சேமித்து வைக்க வேண்டுமா?

நமது வேதாகமம் எந்த ஒரு இடத்திலும் நாம் சேமித்து வைக்க வேண்டும் என்று குறிப்பாக இந்த பூமியிலே செமிப்பதைக் குறித்து குறிப்பிட்டு கூறவில்லை அதற்கு எதிராகத்தான் கூறுகிறது (லூக்கா 12:16-21). அத்தியாவசியங்களில் கொஞ்சம் கூடுதலாக இருப்பதில் தவறில்லை. ஆனால் தேவைக்கு மீறி பதுக்கி வைப்பதில் அல்லது நிறைத்து வைப்பதில் தவறு உள்ளது, கரணம் உண்மையில் அவைகள் பிறருக்கு தேவையானதை பெறுவதை நீங்கள் தடுக்கிறீர்கள் (There is nothing wrong with having a little extra of the essentials lying around. There is something wrong with hoarding supplies to the point that you are preventing people who actually need them from being able to get them).

மத்தேயு 24-25 அதிகாரங்கள்

காலாகாலமாக தொன்றுதொட்டு அநேகர் அப்போஸ்தலனாகிய மத்தேயு எழுதின சுவிசேஷத்தின் 24 மற்றும் 25-வது அதிகாரங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சபையை எடுத்துக் கொள்வதற்காக வருகிற வருகையாக நினைத்தும் பிரசங்கித்தும் போதித்தும் வருகிறார்கள். ஆனால் கொஞ்சம் இதன் பின்னணியையும் எந்த காரியம் கிறிஸ்து இவைகளை கூறும்படியாக ஏவினது என்றும் ஆராயும்போது நாம் கேட்டு வந்த பிரகாரம் அல்ல முற்றிலும் வேறுபட்ட அதற்கு எதிராக வேதம் கூறக்கூடிய காரியம் நமக்கு புரிய வரும். வேறு விதத்தில் கூற வேண்டுமானால் இந்த இரு அதிகாரங்களுக்கும் சபைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகும்.

ஆம், இந்த இரு அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள அடையாளங்களும் காரியங்களுமெல்லாம், இஸ்ரவேலருக்காய் கிறிஸ்து வருகின்ற வருகையாகும். இந்த வருகையானது பொதுவாக ”கிறிஸ்துவின் மகிமையுள்ள வெளிப்படுதல்” என்று அறியப்படுகிறது அதாவது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் இரண்டாம் கட்டம்.

மேலும் சீஷர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்விகள் நம்மை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள வைக்கிறது (மத்தேயு 24:3). அதுமட்டுமல்ல, எல்லா சீஷர்களும் யூதர்களாய் இருந்தார்கள் அல்லது யூத பின்னணியில் உள்ளவர்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அத்தோடு, அவர்களுடைய சிந்தைகள் முழுவதும் ராஜ்ஜியத்தையும் அது எப்பொழுது ஸ்தாபிக்கப்படும் என்பதையும் குறித்து மட்டுமே இருந்தது, இதை கிறிஸ்து உயிரோடு எழுந்த பின்பும் அவர்களில் காணலாம் (அப். 1:6).

ஆகையால், மத்தேயு 24, 25 அதிகாரங்கள் கிறிஸ்து இஸ்ரவேல் தேசத்திற்காக வருகின்ற வருகையாகும் சபைக்காக அல்ல. மேலும் பொதுவாக கர்த்தராகிய கிறிஸ்துவின் இரண்டாம் வருகையானது இரண்டு கட்டங்களாக இருப்பதை வேதாகமம் தெளிவாக எடுத்துரைக்கிறது. உங்களுக்கு ஏற்கனவே தெறிந்திருக்கிறபடி கீழ்கண்ட இரு நிலைகள் அல்லது கட்டங்கள் அவரது இரண்டாம் வருகையில் அடங்கும்:

  1. வானத்தில் இருந்து இறங்கி மத்திய ஆகாயத்திற்கு வருதல் (சபையை எடுத்துக்கொள்வதற்காக சபைக்காக வரக்கூடிய வருகை, Rapture – Jesus’ coming for the Church)
  2. வானத்தில் இருந்து இறங்கி பூமிக்கு வருதல் (பிசாசினை முறியடித்து, இராஜ்ஜியத்தை ஸ்தாபித்து பிறகு முடிவில் உலகை நியாந்தீர்ப்பதற்காக சபையோடு வரக்கூடிய வருகை, Glorious Appearance of the Lord – Jesus’ coming with the Church)

எனவே, இந்த இரண்டு கட்டங்களையும் உங்கள் மனதில் இருத்திக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த இரண்டு அதிகாரங்களை (மத்தேயு 24, 25) சபை எடுக்கப்படுதலுடனோ அல்லது சபைக்காக கிறிஸ்து வருதலாகவோ எடுத்துக்கொள்ள கூடாது என்பதற்கான நான்கு முக்கியமான காரணங்களை காணலாம்.

மத்தேயு 24 மற்றும் 25 அதிகாரங்களில் ஒலிவமலையின்மேல் அமர்ந்து கர்த்தர் இயேசு மொழிந்த அல்லது கூறிய காரியங்கள் யாவும் இப்போதைய அல்லது சபையின் காலத்து உள்ள சம்பவங்கள் ஒன்றும் இல்லை. மாறாக இனி வரவிருக்கிற 7 வருட உபத்திர காலத்து சமயத்தில் சம்பவிக்கும் சம்பவங்களாகும். மேலும் சபை எடுக்கப்படுதலுக்கும் (Rapture) இங்கே கூறப்பட்ட காரியங்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இங்கே கூறப்பட்ட வருகை இஸ்ரவேலருக்காக மேசியாவாகிய இயேசு தாம் முன்னமே எடுத்துக்கொண்ட சபையோடு எல்லாரும் காணும் வண்ணம் பூமிக்கு வரும் வருகையாகும். ஆகவே இங்கே வரும் வருகை சபைக்காக அல்ல மாறாக இஸ்ரவேலருக்காக என்று தெளிவுபடுத்தும் நான்கு காரணங்களை உங்கள் முன் கொண்டு வர விரும்புகிறேன்.

  1. “ஒரு குறிப்பிட்ட நேரம் / சமயம்” கூறப்பட்டுள்ளது, Specified Time (மத்தேயு 24:29)

👉இந்த வருகை உபத்திரவம் நிறைந்த ஒரு காலமாயிருக்கும்.
👉உபத்திரவம் முடிந்தவுடனே கிறிஸ்துவின் வருகை இருக்கும்.
👉ஆனால் நமக்கு தெரியும் சபையானது உபத்திரவ காலத்தில் கடந்து போகாது.
👉சபையை எடுத்துக்கொள்ள கிறிஸ்து வருவதைக்குறித்த குறிப்பிட்ட சமயம் திருமறையில் கொடுக்கப்படவில்லை.
👉மேலும் சபைக்காக கிறிஸ்து வரும் வருகை எந்த நேரத்திலும் இருக்கலாம்.
👉ஆகவே இந்த அதிகாரங்கள் கிறிஸ்துவின் மகிமையுள்ள வெளிப்படுதலைக் குறிக்கிறது. அதாவது இஸ்ரவேல் தேசத்திற்காக அவர் வரும் வருகை.

2. “வெளியரங்கமான நான்கு அடையாளங்கள்”, Four Visible Signs (மத்தேயு 24:29)

👉சூரியன் அந்தகாரப்படும்
👉சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும்
👉நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்
👉வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்

ஆனால் கிறிஸ்து சபைக்காக வருகிற வருகையில் மேலே குறிப்பிட்டுள்ள அடையாளங்களில் எந்தஒரு அடையாளமும் குறிப்பிடப்படவில்லை (யோவான் 14:1-4; பிலி. 3:20-21; 1 தெச. 4:13-18; 1 கொரி. 15:50-58). மாறாக வேறே சில காரியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது:

👉கர்த்தர் தாமே ஆரவாரத்தோடு வருவார்
👉பிரதான தூதனுடைய சத்தம் கேட்கும்
👉தேவ எக்காளம் தொனிக்கும்
👉வானத்திலிருந்து இறங்கிவருவார்
👉கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் மற்றும் உயிரோடிருப்பவர்கள் அவரை மத்திய வானில் சந்திப்பார்கள்

3. “சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்”, All the tribes of the earth will mourn (மத்தேயு 24:30)

👉கிறிஸ்து சபைக்காக வரும்போது எந்த விசுவாசியும் புலம்புவதில்லை.
👉அது சபைக்கு மிகப்பெரிய ஆறுதல் மட்டும் சந்தோஷமாயிருக்கும்.

அப்படிஎன்றால், இங்கே குறிப்பிட்டுள்ள “சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்” என்பது எதைக் காண்பிக்கிறது? அது கிறிஸ்து தாம் மகிமையோடு கூட பூமியிலே இறங்கி வருவது உலகை நியாயந்தீர்க்க என்பதை யாவரும் அறிந்து கொள்வதை குறிக்கிறது. அப்பொழுது மிகப்பெரிய பயமும் திகிலும் அவர்களை ஆட்கொள்ளும். அதை உணர்ந்தவர்களாய், சகல கோத்திரத்தாரும் அவரை கண்டு புலம்புவார்கள்.

4. “மனுஷகுமாரன் வருவதை யாவரும் காண்பார்கள்”, They will see the Son of Man (மத்தேயு 24:30)

👉மனுஷகுமாரன் வருவதை யாவரும் காண்பார்கள்.
👉விசேஷமாக யூத மக்கள் காண்பார்கள் (அப். 2:23; சகரியா 12:10).
👉ஆனால் கிறிஸ்து சபைக்காக வரும்போது அவருடைய மணவாட்டியாகிய சபையையல்லாமல் ஒருவரும் காணக்கூடாது.
👉அநேகரை காணவில்லை என்பது மட்டும் தான் இந்த உலகிற்கு தெரியும்.
👉பவுலோடு இருந்தவர்களுக்கு பவுலுக்கு என்ன சம்பவித்தது என்று அறியாதிருந்ததுபோல் இருக்கும் (அப். 9:7)
👉அதனால் தான் இது நம்மை தவிர்த்து பழைய ஏற்பாட்டில் வாழ்ந்தவர்களுக்கும் புதிய ஏற்பாட்டில் வாழ்கிரவர்களுக்கும் இது இரகசியமாகவே இருக்கிறது (1 கொரி. 15:51)

ஆக, மேலே கண்ட நான்கு காரணங்களும் நமக்கு மிகத்தெளிவாக எடுத்துரைக்கும் சத்தியம் என்னவென்றால், மத்தேயு 24வது மற்றும் 25வது அதிகாரங்கள் சபைக்காக கிறிஸ்து வருகிற வருகை அல்ல. மாறாக இஸ்ரவேலருக்காக அவர் பூமியில் வரும் வருகை ஆகும்.

கொரோனா வைரஸ் வேதாகம தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் அல்ல

மேலே மத்தேயு 24-25 ஆகிய அதிகாரங்களைக் குறித்த விளக்கம் எதற்காக என்று ஒருவேளை நீங்கள் எண்ணியிருக்கலாம், காரணம் இருக்கு. அதற்கும் கொரோனோவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை காண்பிக்கவே இவைகளைக் கூறினேன். அதாவது சபையானது இந்த பூமியிலிருந்து எடுக்கப்பட்ட பிறகு, இந்த பூமியில் உண்டாயிருக்கும் 7 வருட உபத்திரவ காலக்கட்டத்தில் சம்பவிக்கப்போகிறவைகளை தான் ஆண்டவர் இயேசு இங்கே இந்த அதிகாரங்களில் கூறியிருக்கிறார். அப்படியானால் சபையானது இன்னமும் இப்பூமியில் இருக்க, சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு வரவேண்டிய பாழாக்கும் கொள்ளைநோய் (கொரோனா) இப்பொழுது எப்படி வந்தது? வேதாகமம் கூறுவது சரியா? அல்லது நாம் நினைப்பது சரியா? எவ்வித சந்தேகமும் வேண்டாம், வேதாகமம் கூறுவது மட்டுமே சரி. அப்படியானால், இன்று இருக்கிற கொரோனா வைரஸ்க்கும் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள கொள்ளைநோய்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

இவர்தான் எதிர்க்கிறிஸ்து என்று கி.பி. முதலாம் நூற்றாண்டின் நீரோ சக்ரவர்த்தி தொடங்கி இந்நாள் டொனால்ட் ட்ரம்ப் வரை பலரைக் காண்பித்து வந்தது போல, கடைசி காலம் வந்துவிட்டது என்று கூறி எபோலா, மெர்ஸ், சார்ஸ், நிப்பா என்று கூறி இப்பொழுது கொரோனாவில் வந்து நிற்கிறார்கள். இது இத்தோடு முடிந்துபோவதில்லை, இன்னும் இப்படி எத்தையோ வைரஸ்கள் வரும் அத்தனைக்கும் இவர்கள் மத்தேயு 24:7-ஐயும், லூக்கா 21:11-ஐயும், மற்றும் வெளி. 6:8-யும் மேற்கோள் காட்டிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் வேதாகமத்தை சரிவர வாசிப்பதுமில்லை அதில் கூறப்பட்டவைகளை நிதானிப்பதுமில்லை. நருக்கரிசி பட்டு அரைவேக்காடாக தாங்கள் சாப்பிடுவது போதாதென்று பிறருக்கும் உண்ணக் கொடுக்கிறார்கள். அது இறுதியில் ஜீரணிக்காமல் வாந்தியாகவோ அல்லது பேதியாகவோ வெளியேறிவிடும். பிறகும் மீண்டும் சமைக்க தொடங்குவார்கள். அதுபோலவே தான் இவர்களது பிரசங்கமும் காலக்கணிப்பும். அப்பப்பா இவர்களைக் குறித்து என்ன சொல்ல? யூ டூப், முகநூல், வாட்சப் என எல்லா ஊடகங்களிலும் இவர்களின் பொய் தீர்க்கதரிசன செய்திகள் மற்றும் நிறைவேறுதல் குறித்த கருத்துக்கணிப்பு குவிந்துகொண்டு தான் இருக்கின்றன.

பெரோயா பட்டணத்தாரைப் போல வேதாகமத்தை வாசித்து சரியாக நிதானிக்க தெரியாத அப்பாவிகள் அல்லது ஏமாளிகள் இருக்கும்வரை, இந்த ஏமாற்றுகிறவர்கள் ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆம் இவர்கள் வைரஸுக்கு வைரஸ் தாவி தங்களது கருத்துக்கணிப்பை வேதாகம தீர்க்கதரிசன நிறைவேறுதல் எனக் கூறி விசுவாசிகளிடம் திணித்துக்கொண்டேதான் இருப்பார்கள். கவனியுங்கள்: மத்தேயு 24:7-ல், “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்” என்று கூறிவிட்டு நமதாண்டவர் இயேசு அடுத்த வசனத்தில் “இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்” என்றுதான் கூறுகிறாரே அல்லாமல் இதுதான் வேதனை என்று கூறவில்லை. அப்படியிருக்க இன்றைய நவீன கிறிஸ்தவ தீர்க்கதரிசிகள் மட்டும் எங்கிருந்து இப்படிப்பட்ட நிறைவேறுதலையும் கருத்துக்கணிப்பையும் கொண்டுவருகிறார்கள்? சிந்தியுங்கள்!

காரியத்தின் கடைத்தொகை

கிறிஸ்துவுக்குள் பிரியமான வேதாகம கேள்வி-பதில் குழுவிலுள்ள அன்பான சகோதர சகோதரிகள் யாவருக்கும் இந்த கேள்வியின் கடைத்தொகை புரிந்திருக்கும் அல்லது இப்பொழுது அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இருப்பினும் உங்களுக்கு சிறு குழப்பம் அல்லது சந்தேகம் கூட இல்லாதபடிக்கு இரண்டு நிலைகளில் இந்த கேள்விக்கான கடைத்தொகையை கூற விரும்புகிறேன்:

  1. கொரோனாவும் வேதாகமும்

நான் முன்னமே தெளிவாக விளக்கியிருக்கிறபடி, கடைசிக் காலங்களில் உண்டாகும் கொள்ளைநோய்களுக்கும் அதன் நிறைவேருதலாக கருதப்படும் அல்லது கூறப்படும் இந்த கொரோனாவிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. காரணம், வேதாகம தீர்க்கதரிசன நிறைவேருதலாக பெரும்பாலும் மேற்கோள் காட்டப்படுகின்ற மத்தேயு 24:7; லூக்கா 21:11 மற்றும் வெளி. 6:8 ஆகிய வசனங்கள் சுட்டிக்காண்பிக்கும் காலத்திற்கும், இன்று உலகத்தை உலுக்கும் கொரோனாவைரஸின் இந்த காலக்கட்டத்திற்கும் எத்தனைக் கோடி ஏணிகள் வைத்தாலும் எட்டாத வேறுபாடு மற்றும் இடைவெளி உண்டு.

ஆம் இந்த தீர்க்கதரிசன வசனங்கள் நிறைவேறுவதற்கு முன்பதாக வேறு சில முக்கியமான சம்பவங்கள் நடந்தேறவேண்டும். இதோ அவைகள்:

👉 திருச்சபையானது அதன் உள்ளில் வாசம் செய்யும்படிக்கு அருளப்பட்ட ஆவியானவ்ரோடு கூட இந்த பூமியை விட்டு எடுத்துக்கொள்ளப்படவேண்டும் (யோவான் 14; 1 கொரி. 15; 1 தெச. 4; பிலிப்பியர் 3:20). உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் என்று கர்த்தர் இயேசு நமக்கு வாக்கு பண்ணியிருக்கிறார். ஆகையால் சபையானது இந்த பூமியிலிருந்து எடுக்கப்படும்வரை, இந்த பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான எந்த கொள்ளைநோயும் வராது, அப்படி யாராவது வந்துவிட்டது என்று கூறினால் நம்பாதீர்கள் அது வெறும் பொய் மெய்யில்லை. என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன் என்று நமதாண்டவர் சபைக்கு வாக்கு பண்ணியிருக்கிறார். அவர் வாக்கு மாறார், உபத்திரவத்திற்கு முன்னே நம்மை எடுத்துக்கொள்வார்.

👉 கேட்டின் மகனாகிய பாவமனுஷன் (எதிர்க்கிறிஸ்து) வெளிப்பட வேண்டும். ஆம் எப்படி சபை எடுத்துக்கொள்ளப்படாமல் உபத்திரமும் கடைசிக்காலமும் வராதோ அதுபோலவே எதிர்க்கிறிஸ்து வெளிப்படாமல் உபத்திரகாலம் ஆரம்பிக்காது. இப்படிக் கொரோனா போன்று அநேக சம்பவங்களால் விசுவாச உலகம் வஞ்சிக்கப்பட நேரிடும் என்று அறிந்துதான், முதலாம் நூற்றாண்டிலேயே பவுல் இதை வலியுறுத்தி கூறியிருக்கிறார். கவனியுங்கள்: “அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா? அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்கள். அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்.” (2 தெச. 2:1-8)

👉 தானியேலின் எழுபது வாரங்கள் தரிசனத்தின் கடைசி வாரமாகிய எழுபதாவது வாரம் ஆரம்பிக்கப்பட வேண்டும். மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது என்று முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தின் 69 வாரங்கள் ஏற்கனவே நடந்தேறி விட்டது. மீதமுள்ளது கடைசி ஒரு வாரம், அது சபையானது இந்த பூமியை விட்டு எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு ஆரம்பிக்கும். எரேமியா 30:7-ல் குறிப்பிடப்பட்டுள்ள, “ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்” என்பது இந்த கடைசி எழுபதாவது வாரத்தின்போது நிறைவேறும். அப்படியானால் அதற்கு பன்னிரண்டு கோத்திரங்கள் மீண்டுமாய் கூட்டிசேர்க்கப்பட வேண்டும், மேலே கண்ட பாவ மனுஷன் வெளிப்பட வேண்டும், சபையும் இந்த பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இப்படியிருக்க வேதாகமம் அறிவிக்கும் இந்த கடைசி காலத்திற்கும் கொரோனாவிற்கும் என்ன சம்பந்தம், யோசித்துப்பாருங்கள்!

👉 எருசலேமில் தேவாலயம் மீண்டும் கட்டப்பட்டு எதிர்க்கிறிஸ்துவால் இஸ்ரவேலர்களோடு ஒரு வாரம் அதாவது ஏழு வருடங்கள் உடன்படிக்கை பண்ணப்பட வேண்டும். இனி வரவிருக்கிற எதிர்க்கிறிஸ்து ஒரு வாரமளவும் அல்லது ஏழு வருடங்கள் இஸ்ரவேலருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது அதாவது ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் கழித்து எருசலேமில் புதிதாக கட்டப்பட்ட தேவாலயத்தில் நடந்துகொண்டிருக்கிற பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவான்; அவனது சுய ரூபம் அப்போது வெளியாகும், அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்று உபத்திரவ காலத்தைக் குறித்து வாசிக்கிறோம். (தானியேல் 9:24-27)

இப்படியாக கடைசி காலமும் கிறிஸ்துவின் பூமிக்குரிய வருகையும் வருமுன் மேற்கண்ட இதுபோன்ற அநேக முக்கியமான சம்பவங்கள் நடந்தேற வேண்டும், ஆகையால் இன்று இருக்கிற கொரோனா மட்டுமல்ல இனி எத்தனை புதிய வைரஸ்கள் வந்தாலும், மேற்கண்ட காரியங்கள் நடந்தேறாமல், கடைசிக்காலம் வராது, கிறிஸ்துவும் இப்பூமிக்கு வரமாட்டார். ஒருவேளை இந்த கொரோனா வைரஸ் கடைசிக்காலம் வந்துவிட்டதைக் காண்பிக்கவில்லை மாறாக கடைசிக்காலங்களில் உண்டாகும் கொள்ளைநோய்களுக்கு ஒரு முன்னோடி என்று கூறுவோமானால், கொரோனா மட்டுமல்ல இதற்கு முன் உண்டாகி உலகை அச்சுறுத்திய அனைத்து வைரஸ்களையும் கூறவேண்டும். மேலும் அது வெறும் ஒரு ஒப்பீடு மட்டுமே அல்லாமல் கடைசிக்காலத்தை கணிப்பதில்லை என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

2. கொரோனாவும் கிறிஸ்தவர்களும்

நாம் தேவனுடைய பிள்ளைகள் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்கிறபோதிலும், நாம் இந்த பூமியில் வாழும் சாதாரண மனிதர்கள் தான் என்பதை மறந்துவிடக்கூடாது. நமக்கும் நோய் தொற்று உண்டாகும், சில வேளைகளில் மரணிக்கவும் நேரிடலாம் அதற்காக கலங்கி தவிக்க அல்லது வருந்த தேவையில்லை. அரசாங்கமும் மருத்துவ துறையும் கூறுகிற ஆலோசனைகளையும் விதிமுறைகளையும் கடைபிடிப்போம், மீதமுள்ளதை நமது தேவன் பார்த்துக்கொள்வார். தேவனுடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் என்று தேவனுடைய ஆவியானவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளோம் (ரோமர் 8:28). நம்மை விட்டு ஒருநாளும் விலகாமல் நம்மை கைவிடாமல் நம்மோடு கூட இருப்பதாக நம் தேவன் நமக்கு வாக்கு கொடுத்திருக்கிறார், அவர் வாக்கு மாறமாட்டார் (யோசுவா 1:; மத்தேயு 28:20; எபிரெயர் 13:5). உங்களுக்காகவும் தேசத்திற்காகவும் மன்றாடுங்கள், இந்த தருணத்தில் திறப்பின் வாசலில் நின்று ஜெபிப்பதோடு நின்றுவிடாமல் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி கிறிஸ்துவை பிறருக்கு அறிவியுங்கள்!

பழைய ஏற்பாட்டில் அநேக வாதைகள் எகிப்தை வாதித்தபோது அவைகள் இஸ்ரவேலர்கள் வசித்திருந்த கோசேன் நாட்டில் ஒன்றும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதை தேவன் இன்றும் நமக்கு செய்ய வல்லவராக இருக்கிறார், ஆம் கொரானா வைரஸ் விமானத்தில் பயணித்து உங்கள் ஊர் தெருக்களில் வலம் வந்தாலும் உங்கள் இருப்பிடத்தை அண்டாதபடிக்கு நம் தேவனால் நம்மைக் காக்கக் கூடும். சங்கீதம் 91-ன் முதல் பதினோரு வசனங்களைக் கவனியுங்கள்:

“உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய். எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.”

இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களையும் இதை நமக்கு அளித்திருக்கிற உன்னதமானவரையும் கொண்டிருக்கிற நாம் எதற்கும் அஞ்ச தேவையில்லை. அவர் அனுமதியில்லாமல் நமது தலையில் இருக்கும் ஒரு ரோமம் கூட கீழே விழாது. நமக்கு எது நேர்ந்தாலும் என்ன வந்தாலும் அனைத்தையும் அவர் அறிந்திருக்கிறார், அவரே சர்வத்தையும் ஆட்கொண்டு தாங்குகிறவர்! ஆமென்.

சகோ. ஆ. திருமுருகன்

மின்னஞ்சல்: [email protected]

TamilSermonNotes.com இணையதளத்தின் சார்பில் சகோ. ஆ. திருமுருகன் அவர்களுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)