சுதந்திர இந்தியாவின் இன்றைய தேவை

நமது இந்திய தேசம் தனது 74வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது.

இந்த சுதந்திர இந்தியாவை பல்வேறு விதமான போராட்டங்களையும், இன்னல்களையும் கடந்து, இன்றைக்கு நாம் அனுபவிக்கிறோம். இதற்காக தியாகம் சகித்த தியாகிகள் பலர். இன்றளவும் அவர்கள் நினைவுகூறப்பட வேண்டியவர்கள்.

பல்வேறு போராட்டங்களாலும், உயிரிழப்புகளாலும் பாடுபட்டு பெற்ற இந்திய சுதந்திரத்தை மதிப்போடும், அதை முறையாகவும் அனுபவிப்பது இந்த சுதந்திர இந்தியாவில் வாழும் குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். “அதே வேளையில் தேவபிள்ளைகள் என்கின்ற நிலையில் தேசத்திற்காக திறப்பில் நிற்க வேண்டிய கூடுதல் பொறுப்பும் நமக்கு உண்டு.”

“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு” என்று நாம் மார்தட்டிக் கொண்டாலும், தேசத்தில் சில இடங்களில் நடக்கின்ற அசம்பாவிதங்களும், வன்முறைகளும் நம்மை வேதனைப் படுத்துகிறதாகவே இருக்கிறது. இவைகளெல்லாம் நம்முடைய தேசத்திற்காய் நாம் அதிகமாய் ஜெபிக்க வேண்டிய நம்முடைய கடமையை நினைவுபடுத்துகிறது.

தேசத்தின் ஷேமத்திற்கு நமது ஜெபம் மிக அவசியம் (2 நாளா 7:14). “விசுவாசிகளின் ஜெபத்தை கொண்டே தேவன் உலகை (இந்தியாவை) ஒழுங்குபடுத்துகிறார் என்பது அநேக திருச்சபைகளுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அவர்கள் ஒருபோதும் ஜெபத்தை உதாசீனம் செய்யமாட்டார்கள்” என்றார் ஆண்ட்ரு மூரே.

தேசம் (இந்தியா) பாழாக்கப்படுகின்ற முகாந்திரத்தை அறிந்து (எரே 9:12), தேசம் அழிக்கப்படாதபடி திறப்பிலே நிற்கும் மனிதனை தேவன் தேடுகின்றார் (எசே 22:30).

இந்தியாவின் இன்றைய தேவை

1. ஜனங்களின் இரட்சிப்புக்காய் கர்ப்பவேதனைப்படும் பவுல்கள்! கலா 4:19

2. விக்கிரகங்களுக்கு எதிராய் எழும்பி நிற்கும் கிதியோன்கள்! நியாயாதி 6:27

3. மெய்யான தேவனை நிரூபித்து காட்டும் எலியாக்கள்! 1 இராஜா 18: 36,39

4. தேசத்தை சுவிசேஷமயமாக்கும் பிலிப்புகள்! அப் 8:5,6,14

5. தேவ வார்த்தையை வெளிப்படுத்தும் அகபுகள்! அப் 11:28

6. ஜனங்கள் காக்கப்படும்படி உபவாசிக்கும் எஸ்தர்கள்!  எஸ்தர் 4:16

7. பாழான கிராமங்களுக்காய் பரிந்துபேசும் தெபொராள்கள்! நியாயா 5:7

இந்திய தேசத்தின் இம்மாபெரும் தேவையை சந்திக்க நம்மில் யாருண்டு?

ஜெபிப்போம்! அர்ப்பணிப்போம்! உழைப்போம்!

கே. விவேகானந்த் (Vivekk7)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: