ஆழ்கடலில் ஆவிக்குரிய பாடங்கள்

ஆவிக்குரிய ஆசிரியரான ஆண்டவர் இயேசுகிறிஸ்து, ஆன்மீக பாடங்களை தம் அன்பர்களுக்கு, வயல்கள், வனாந்திரங்கள், மலைகள், தோட்டங்கள், ஏன் ஆழ்கடலிலும் கற்றுக்கொடுத்தார்.

” இதோ, அவருடைய மாணாக்கர்களான சீஷர்கள், செயல்முறையில் கற்றுக்கொண்ட ஆவிக்குரிய பாடங்கள். ( Practical study )

( மாற்கு 4:35-41வசனங்கள் )

பாடம். 1 – ஜெபம்
அவரை எழுப்பினர்.

பாடம் . 2 – வல்லமை
எழுந்து காற்றை அதட்டினார்.

பாடம். 3 – அதிகாரம்
அதிகாரத்திற்கு அடங்கி, அமைதலானது, சுழல் காற்று.

பாடம். 4 – தைரியம்
ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்?

பாடம். 5 – விசுவாசம்
ஏன் உங்களுக்கு விசுவாசமில்லாமற்போயிற்று?

பாடம். 6 – கீழ்ப்படிதல்
காற்றும் கடலும் இவருக்கு கீழ்ப்படிகிறதே !!!

பாடம். 7 – தேவனைப்பற்றிய அறிவு
இவர் யாரோ? எனப் பேசிக்கொண்டு அடுத்த பாடத்திற்கு ஆயத்தமானார்கள்.

கல்வியில் சிறந்தது ஆவிக்குரிய கல்வி. அதை….

என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்” மத் 11:29 என்கிறார் நமது நல்லாசிரியர் இயேசுகிறிஸ்து.

ஆவிக்குரிய பாடங்களை ஆண்டவர் இயேசுகிறிஸ்துவிடம், ஆவலோடும், ஆர்வத்தோடும், ஆசையோடும், நாமும் தொடர்ந்து கற்போமா…

ஆண்டவரின் பாடசாலை மாணவன் ✍ K. ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: