காபிரியேலின் நற்செய்தி

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாய் பிறக்கும் முன்னே, தேவ தூதனாகிய காபிரியேல், இயேசு கிறிஸ்துவை குறித்து மரியாளுக்கு அறிவித்த நற்செய்தி (லூக்கா 1:26-33), மண்ணுலகத்தில் மனிதனாய் பிறந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யார் என்பதை நமக்கு காண்பிக்கிறது.

  1. கன்னிகையின் குமாரன்

“இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்,” (லூக்கா 1:31)

  1. இயேசு என்ற நாமத்துக்கு உரியவர்

“அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.” (லூக்கா 1:31)

  1.  பெரியவர்

“அவர் பெரியவராயிருப்பார்” (லூக்கா 1:32)

  1.  உன்னதமானவரின் குமாரன்

உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்” (லூக்கா 1:32)

  1. தாவீதின் சிங்காசனத்தை வீற்றிருக்கிறவர்

“ கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.” (லூக்கா 1:32)

  1. யாக்கோபின் குடும்பத்தை  அரசாளுகிறவர்

“அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்” (லூக்கா 1:33)

  1. முடிவில்லாத  ராஜ்ஜியத்திற்கு சொந்தக்காரர்

“அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது” (லூக்கா 1:33)

கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: