மரியாளின் துதிப்பாடல்

கிறிஸ்துவின் பிறப்பை கூறும் லூக்கா சுவிசேஷத்தின் முதல் இரண்டு அதிகாரங்கள் பாடல்களால் நிரம்பியிருக்கின்றன.

 1. எலிசபெத்தின் பாடல் ( லூக்கா 1: 42-45)
 2. மரியாளின் பாடல் ( லூக்கா 1: 46-55)
 3. சகரியாவின் பாடல் ( லூக்கா 1: 67-79)
 4. தேவதூதர்களின் பாடல் ( லூக்கா 2: 13, 14)
 5. சிமியோனின் பாடல் ( லூக்கா 2: 28-32)

   மரியாள் தனது பாடலில் கிறிஸ்துவின் பிறப்போடுள்ள தேவனின் குணாதிசயங்களை நினைவுகூர்ந்து கர்த்தரை மகிமைப்படுத்துகிறார் (லூக்கா 1: 46-55). 

 1. தாழ்மையை நோக்கிப் பார்க்கிறவர் 

“அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்” (லூக்கா 1:48)

 1. வல்லமையுள்ளவர்

வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்” (லூக்கா 1:49)

 1. பரிசுத்தர்

“அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது” (லூக்கா 1:49)

 1. இரக்கமுள்ளவர்

“அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது” (லூக்கா 1:50, 54)

 1. நியாயாதிபதி

“தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.”
பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.” (லூக்கா 1:51-53)

 1. உடன்படிக்கையை  நினைவுகூர்ந்து ஆதரிக்கிறவர்

“நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,
தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார்” (லூக்கா 1:54, 55)

 1. இரட்சகர்

“என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது” (லூக்கா 1:47)

கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: