அழுகையின் ஆற்றல்

“அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து…”  சங் 86:6

அழுகை – சூழ்நிலைக்கேற்ற நிலைகளில் 

  • குழந்தை தாய்ப்பாலுக்கும், 
  • பிள்ளைகள் தேவைகளுக்கும், 
  • நாம் நமது உடலில் உண்டாகும் வேதனையிலும், 
  • மன அழுத்தங்களிலும், 
  • தவறுகளை உணரும்போதும், 
  • வெற்றியிலும், தோல்வியிலும், 
  • உறவுகள் நெருங்குகையிலும் விலகுகையிலும், 
  • லாபத்திலும் நஷ்டத்திலும், 
  • விவஸ்தையே இல்லாம அழுகுறீயே என காரணமின்றியும். 

நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் அழுகை இடம்பெறுகிறது. தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும்போதும் அழுதுகொண்டே பிறக்கும் நாம், போகும்போது அநேகரை அழ வைத்து விட்டும் போகிறோம், இவையெல்லாம் இயற்கை. ஆயினும்…, 

ஆண்டவர் சமூகத்தில் அழுவது ஆற்றல் மிக்கது

ஏனெனில், தேவ சமூகத்தில் அழும்போது… 

1.  தேவனின் – கனிவான கவனம் நம்மீது திரும்புகிறது. லூக் 23:27-28

2. தேவன் – எழுந்து தம் ஜனங்களுக்காக செயல்படுகிறார். யோவேல் 2:17-18

3. தேவன்– வனாந்தரத்திலும் வாக்கருளி, வழி காட்டுகிறார். ஆதி 21:16-22

4. தேவன் – நாம் இழந்ததையெல்லாம் திரும்பக்கொடுக்கிறார். 1 சாமு 30:1-19

5. தேவன்– முன்னோக்கி ஓடின காலத்தின் கடிகாரத்தின் முள்ளை, பின்னோக்கித் திருப்பினார். ( ஆரோக்கிய வாழ்வுக்காக ) ஏசா 38:2-8

6. தேவன் – எதிரான காரியங்களை மாற்றியமைக்கிறார். எஸ் 9:1-8:3

7. தேவன் – தம்முடைய, நிலையான ஆசீர்வாதங்களைத் தருகிறார். ஓசி 12:4

சில நேரங்களில் அழுகை அவசியமற்றது எனத் தோன்றலாம், ஆனால் 

தேவ சமூகத்தில் அழுகை ஆற்றல்மிக்கது 

கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: