முன்மாதிரி

முக்கியத்துவம் வாய்ந்த முன்மாதிரி

1 தீமோத்தேயு  4:12

தேவ இராஜ்ஜியம் கட்டப்பட்டு தேவ மகிமை விளங்குவதற்கு ஏதுவாக  முன்மாதிரி வாழ்க்கையின் அவசியத்தை, ஆண்டவர் தம் சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார், மலைமீதுள்ள பட்டணம் போன்றும், வீட்டிற்கு விளக்காகவும், பூமிக்கு உப்பாகவும் இருப்பதற்கு கற்பித்ததுமன்றி, அவ்வித முன்மாதிரியுடன் வாழ்ந்தும்  காண்பித்தார் ஆண்டவர். 

முன்மாதிரியான தலைவன் நல்லதோர் சமுதாயத்தையும், ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களையும், பெற்றோர் நல்ல பிள்ளைகளையும், தங்களின் முன்மாதிரியான வாழ்க்கையின் மூலம் உருவாக்குகிறார்கள். 

இவ்விதமாக வேத வசனமும் நாம் மாதிரியான வாழ்க்கை வாழவேண்டிய பகுதிகள் என்னவென்பதை வலியுறுத்தி, தேவனுக்காக  முன்மாதிரிகளாக நிற்கத் தூண்டுகோளாய் அமைகின்றன. 

1.  மனத் தாழ்மையுடன் வாழ்வதில் முன்மாதிரி.  -யோவான் 13:15

2.  ஏக மனதுடன் வாழ்வதில் முன்மாதிரி.  -ரோ 15:6

3.  நற்செயல்கள் செய்வதில் முன்மாதிரி.  -தீத்து 2:7

4.  கிறிஸ்துவுக்காக பாடுகள் சகிப்பதில் முன்மாதிரி.  -1பே 2:21

5.  ஒழுக்கம் நிறைந்த வாழ்வில் முன்மாதிரி.  -2 தெச 3:7-9

6. சபை வாழ்வில் ஒருவருக்கொருவர் முன்மாதிரி.  -1 பே 5:3

7. கடினமான சூழ்நிலைகளிலும் கர்த்தரைப் பின்பற்றுவதில் முன்மாதிரி.  -1 தெச 1:7 

நாமும் வாழுவோம் முன்மாதிரியுள்ள வாழ்க்கை – வல்லவரின் துணையுடன்! 

K  ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: