உள்ளும் புறமும்

பகல்  உணவிற்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அழைத்த பரிசேயன், ஆண்டவர் கைகழுவாமல் சாப்பிட்டதை கண்டு ஆச்சரியப்பட்டான். வாழ்க்கையின் வெளிப்புறம் மட்டுமல்ல, உள்புறமும் தூய்மையுடன் காணப்படவேண்டும் என்ற அவசியத்தை பரிசேயனாகிய அவனுக்கு வலியுறுத்த, உணவு நேரத்தை பயன்படுத்தி உண்மையை உணர்த்தினார் ஆண்டவர் (லூக்கா 11:37-40).

மட்டுமல்ல, வேதத்தில் உள்ளும் புறம்பும் என்று எழுதப்பட்டிருக்கும் வேத  பகுதிகளிலிருந்தும், தேவையான சில உண்மைகளை கற்றுக்கொள்ள முடிகிறது. 

1. உள்ளும் புறம்பும்,  கீழ் பூசு. – ஆதி 6:14 

( நியாயத்தீர்ப்பினின்று தப்பிக்கொள்ள ஆயத்தம் )

2. உள்ளே யாக்கோபு, வெளியே ஏசா. -ஆதி 27:22 

( வெளித்தோற்றதைக் கண்டு எவரிடமும் ஏமாந்திட வேண்டாம் )

3. உள்ளே அழுக்கு, வெளியே அழகு. -லூக் 11:39-40 

( பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை யாரும் கானா உள் அலங்கோலத்தை )

4. உள்ளே ஓநாய், வெளியே ஆடு. -மத் 7:15 

( கண்ணை மறைக்கும்  கள்ளப் போதனைகளுக்கு கவனம் )

5. உள்ளே பயம், வெளியே போராட்டம்.2 கொரி 7:5 

( கண்டு அச்சம் வேண்டாம் அடுத்த வினாடியே ஆறுதல் வரும் 7:6)

6. உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக, புறம்பான மனிதன் அழிந்து… -2 கொரி 4:16 

( தேவனாகிய சிற்பாசாரி தேவையற்றதை அகற்றி அழித்து, தேவ சாயலை வடிவமைக்கின்றார், சோர்வு வேண்டாம் )

7. உள்ளும் புறம்பும் மேய்ச்சல். -யோ 10:9 

( உள்ளே தேவ சமுகத்தில் மகிழ்ச்சி, வெளியே தேவன் நிமித்தம் மகிழ்ச்சி )

என் வாழ்வின் உள்புறத்தையும், வெளிப்புறத்தையும் உமக்கு உகந்ததாக உருவாக்கும் ஆண்டவரே!   

K ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: