இனிவரும் காலம் குறுகினதானபடியால்

வருடத்தின் கடைசியை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கும் நாம், வருகையின் கடைசி காலத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம். 

சத்துருவும் தனக்கு கொஞ்ச காலம் தான் இருக்கிறது என்று அறிந்து (வெளி 12:12) அவனின் கிரியைகளை அதிகப்படுத்தியிருக்கிறதை, உலகின் நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன. தொற்றுநோய்களும் பேரழிவுகளும் போராட்டங்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன. வரவர நிலைமை இன்னும் மோசமாகி கொண்டே தான் போகிறது. 

உலகில் வாழும் ஜனங்களுக்கு இது புதிதானாலும், கிறிஸ்துவை விசுவாசித்து அனுதினமும் வேதத்தை வாசிக்கும் நமக்கு, இது புதிதல்ல. காரணம், “கடைசி நாட்களில் கொடிய காலங்கள்” வருமென்று வேதம் நம்மை எச்சரித்திருக்கிறது (2 தீமோ 3:1). ஆகவே காலத்தை அறிந்து நாம் செயல்பட வேண்டியது அவசியம் (ரோமர் 13:11).

இனிவரும் காலம் குறுகினதானபடியால் (1 கொரி 7:29), இந்த கடைசி நாட்களில் ஒரு விசுவாசி எப்படி வாழவேண்டும் என்று வேதம் ஆலோசனை கொடுக்கிறது.

  1.   நற்குணத்தை  காத்துக் கொள்ளுங்கள். 2 தீமோ 3:1-6
  1.  வசனத்தின் மீது வாஞ்சையாய் இருங்கள். 2 பேதுரு 1:19
  1. பரிசுத்தமாய் வாழ முயற்சி செய்யுங்கள்.   வெளி 22:10,11
  1.  ஜெபத்திற்கு நேரம் ஒதுக்குங்கள்.  மாற் 13:33
  1.  செல்லும் இடமெங்கும் சுவிசேஷத்தை சுமந்து செல்லுங்கள். 2 பேதுரு 3:9
  1.  பரலோக சிந்தை உள்ளவர்களாய் இருங்கள். 1 தீமோ 6:19
  1. திருப்தியுள்ள வாழ்க்கை வாழுங்கள். 1 தீமோ 6:6-7

“நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.” எபேசியர் 5:16

கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: