ஆபிரகாமின் வீடு

மனித வாழ்க்கையை / குடும்பத்தை வேத புத்தகம் வீட்டோடு ஒப்பிடுகிறது (சங் 119:54; 127:1).  ஆபிரகாம் கூடாரங்களில் குடியிருந்தான் என்று வேதத்தில் வாசித்தாலும் ( எபி 11:9; ஆதி 12:8), அவருடைய வீட்டையும் (குடும்பத்தையும்), வீட்டாரையும் குறித்தும் வேதத்தில் வாசிக்கிறோம் (ஆதி 14:14; 18:19;). அந்த வசனங்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும்போது ஆபிரகாமின் வீடு அல்லது அவரின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை நாம் அறிய முடியும்.

  1.  அகற்றிவிட்ட வீடு.  ஆதி 12:1 

“கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு.”

தன் வாழ்க்கையில் கர்த்தர் அகற்றிவிட  சொன்னவைகளை அவர்   அகற்றிவிட்டார்.

  1.  ஆயத்தமான வீடு.  ஆதி 14:14

“தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து.”

தன் வீட்டில் உள்ளவர்களை ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார்.

  1. இசைகின்ற வீடு. ஆதி 17:27

“வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.”

வீட்டார் யாவரும் எந்த காரியத்தையும் ஒன்றாய் செய்கின்றார்கள்.

  1.  ஈகையின் வீடு. ஆதி 18:1-4

“ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள்.”

அந்நியரை / தேவதூதர்கள் உபசரித்தார்.

  1.  உபதேசிக்கும் வீடு. ஆதி 18:19

கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான்.”

 கர்த்தரை தன் வீட்டாருக்கு கற்றுக்கொடுத்தார் / யேகோவாயீரே

  1.  ஊன்ற கட்டப்பட்ட வீடு. ஆதி 24:2

“ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி: நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்”

ஆபிரகாம் அவர் அறிந்த சத்தியத்தில் / விசுவாசத்தில் உறுதியாய் இருந்தார்.

  1.  எச்சரிப்பின் வீடு. ஆதி 12:8-10

“அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டு போனான்.
அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று.”

பலிபீடத்தை விட்டு தூரம் போன வாழ்க்கை, பஞ்சத்தை கொண்டுவந்தது. இது நமக்கு ஓர் எச்சரிப்பு.

  கே.   விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: