கிறிஸ்து என்னும் இயேசு பிறந்தார்
கிறிஸ்து என்னும் இயேசு பிறந்தார். மத்தேயு 1:16
மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் இப்பூமியில் பிறந்தவர்களே. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. ஆகவேதான் அவருடைய பிறப்பு உலகம் முழுவதும் நினைவு கூறப்படுகிறது.
கிறிஸ்துவின் பிறப்பை குறித்து வேதம் கூறும் சத்தியம்.
- தாவீதின் சந்ததியில் பிறந்தார். (ரோமர் 1:5, 2 தீமோ 2:8)
வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதலாய் பிறந்தார் (லூக் 1:69, 75)
- கன்னிகையின் குமாரனாய் பிறந்தார். (கலா 4:5)
“ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும்” (கலா 4:5). ஸ்திரீயினிடத்திற்தான் பிள்ளைகள் பிறக்கிறார்கள் என்றாலும், இயேசு கிறிஸ்து கன்னிகையின் குமாரனாய் பிறந்தார் (ஏசா 7:14). அதாவது, அவர் பரிசுத்தமுள்ளவராய் பிறந்தார்.
- பாலகனாய் பிறந்தார். (ஏசா 9:6)
தேவன் மனிதனானார். “பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்” எபி 2:14
- இயேசு என்ற நாமத்திலே பிறந்தார். (மத் 1:16)
“அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத் 1:21).
- இரட்சகராக பிறந்தார். (லூக் 2:11)
“பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” (1 தீமோ 1:15). மனுகுலத்தை பாவத்திலிருந்து இரட்சிக்க சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்.
- இராஜாவாகப் பிறந்தார் (மத் 2:2)
அவரை உள்ளத்தில் ஆண்டவரும் (ஆளுகை செய்கிறவர்) இரட்சகருமாக ஏற்றுக் கொள்கிறவர்களின் வாழ்வில் இராஜாவாய் வீற்றிருந்து பராமரித்து, பாதுகாத்து, வழிநடத்துவார்.
- மரித்தோரிலிருந்து முதற் “பிறந்தவர்” வெளி 1:5)
மரித்தோரிலிருந்து முதற் “பிறந்தவர்” என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்து சொல்லப்படவில்லை என்றாலும், மரித்தவர்களின் நடுவிலிருந்து உயிரோடு எழுந்தவராய் இருக்கின்றார் என்பதை காட்டுகிறது. அவர் இன்றும் ஜீவிக்கின்றார். இனி இந்த பூமியை நியாயம் தீர்க்கவராக வரப்போகின்றார்
அவர் பிறந்ததை நினைவு கூறும் சந்தர்ப்பத்தில் அவர் மரித்தார், அவர் உயிர்தெழுந்தார், அவர் மறுபடியும் வருவார் என்பதையும் நாம் நினைவு கூற வேண்டியது அவசியம்.
இயேசு கிறிஸ்து “உங்களுக்காக பிறந்தார்” என்பதை மறக்க வேண்டாம் (லூக் 2:10,11).
கே. விவேகானந்த்