TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7இயேசு கிறிஸ்து

சகரியாவின் இரட்சணிய பாடல்

கிறிஸ்துவின் பிறப்பு பாடல்களால் சூழப்பட்டிருக்கிறதை லூக்கா சுவிசேஷத்தில் காண முடியும்.

  • எலிசபெத்தின் பாடல் ( லூக்கா 1: 42-45)
  • மரியாளின் பாடல் ( லூக்கா 1: 46-55)
  • சகரியாவின் பாடல் ( லூக்கா 1: 67-79)
  • தேவதூதர்களின் பாடல் ( லூக்கா 2: 13, 14)
  • சிமியோனின் பாடல் ( லூக்கா 2: 28-32)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிறந்த பொழுது, இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் (லூக் 2:11) என்று தேவ தூதர்களால் அறிவிக்கப்பட்டது. அந்த இரட்சகராகிய இயேசு கிறிஸ்து அருளும் இரட்சிப்பை குறித்து, யோவான் ஸ்நானகனின் தகப்பனாகிய சகரியா தனது தீர்க்கதரிசன பாடலில் பாடி உள்ளார் (லூக்கா 1:67-79). 

அவர் தனது பாடலில் “விடுதலை” (லூக் 1:71), “மீட்டுக் கொண்டு” (லூக் 1:74), “இரட்சிக்கும்படிக்கு” (லூக் 1:74), “இரட்சணியக் கொம்பு” (லூக் 1:75), “இரட்சிப்பு” (லூக் 1:77) போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை காண முடியும். ஆகவே சகரியாவின் பாடல் ஒரு “இரட்சணிய பாடலாகும்”.

பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட “இரட்சிப்பு”, சரித்திரத்தில் நிறைவேற போகிறது. அந்த “இரட்சகர்” இதோ பிறக்கப் போகிறார் என்று சகரியா பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தீர்க்கதரிசனமாய் பாடினார்.

அவருடைய பாடலில் இரட்சிப்பு என்பது…

  1. இரட்சிப்பு கர்த்தருடைய செயல். (லூக் 1:74, 79).

இரட்சிப்பு நம்முடைய கிரியையினால் உண்டாவதில்லை, அது கர்த்தருடையது. நம்முடைய நிலையை அறிந்து “அவரே நம்மை சந்தித்தார்” என்பதை இந்த பகுதி நமக்கு சுட்டி காண்பிக்கிறது.

  1. இரட்சிப்பு தாவீதின் வம்சத்தின் மூலம் வருகிறது. (லூக் 1:75).

தாவீதின் வம்சத்திலே ஏற்படுத்தப்பட்ட “இரட்சணிய கொம்பு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாகும்”. காரணம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாவீதின் சந்ததியிலே பிறந்தார் (ரோம 1:5,  லூக் 3:23-32).

  1. இரட்சிப்பு என்பது பாவமன்னிப்பாகிய மீட்பு. (லூக் 1:77).

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் (1 கீமோ 1:15). அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு (கொலோ 1:14, எபே 1:7).

  1. இரட்சிப்பு தேவனுடைய இரக்கத்தினால் கிடைக்கிறது. (லூக் 1:77, 69).

நம்முடைய தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் (ஈபே 2:4,5).

  1. இரட்சிப்பினால் சத்துருவின் கையிலிருந்து விடுதலை கிடைக்கிறது. (லூக் 1:74, 71).
  1. இரட்சிப்பிற்கு முந்திய நிலை அந்தகாரமும், மரண இருளும். (லூக் 1:78).
  1. இரட்சிப்பின் விளைவு வெளிச்சமும், சமாதானமும். (லூக் 1:78, 79).

இந்த இலவசமான இரட்சிப்பை பெறாதவர்களுக்கு “இரட்சகரை” அறிவிக்கவே அவர் நம்மை இரட்சித்தார்.

கே. விவேகானந்த் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)