தள்ளப்பட்டவைகளே, தேவனால் தகுதியாக்கப்பட்டன !!!

அழகு, அந்தஸ்து, பணம், படிப்பு, நிறம், மொழி, மதம், இனம் என்று மனிதன் தன் சக மனிதனை தள்ளிவிட்டு எள்ளி நகைக்கும் உலகமிது.

ஏன்? தரணிக்கு சொந்தக்காரரையே, தலைகீழாய் தள்ளிவிட முயன்ற உலகமிது. லூக் 4:29

தள்ளப்பட்டவைகளே தகுதியாயின, என்று எழுதினார் ஆண்டவரின் அன்பின் சீஷன்.

(யோவான்  சுவிசேஷத்திலிருந்து)

1. தள்ளப்பட்ட நாசரேத்தூரிலிருந்துதான், நன்மை செய்கிறவராக நடந்து வந்தார் நமது ஆண்டவர். யோவான் 1:45-46

2. தள்ளப்பட்ட கற்சாடிகளைக் கொண்டே, கானாவூரின் கலியாண வீட்டை களிப்புறச்செய்தார். யோவான் 2:6-7

3. தள்ளப்பட்ட சிறையிலிருந்த, யோவான்ஸ்நானகனையே, தம் தோழனாக்கினார். யோவான் 3:24-29

4. தள்ளப்பட்ட சமாரியா பெண்ணிடம் தானே, ஜீவத்தண்ணீரை கொடுத்தனுப்பினார். யோவான் 4:41-42

5. தள்ளப்பட்ட நிலையில் முப்பத்தெட்டு வருஷமாய் வியாதியில் கிடந்தவனை, எடுத்து நிறுத்தினார். யோவான் 5:7

6. தள்ளப்பட்ட சிறுமையின் அப்பத்தை, வைத்திருந்த சிறுவனைக் கொண்டே பல்லாயிரம்பேரை போஷித்தார். யோவான் 6:8-9

7. தள்ளப்பட்டு கொல்லப்பட இருந்தவளுக்கு, எழுதினாரே நீதியின் தீர்ப்பை, தரையிலும்! திருமறையிலும்! யோவான் 8:45

“தம்மிடம் வருபவரை இயேசு தள்ளிடவேமாட்டார்” யோவான் 6:37

உங்கள் சகோதரன்

K ராம்குமார் Evg. ஓசூர்

9842164877.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: