தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்

வாழ்க்கையின் பலவிதமான அனுபவங்களின் மூலமாய் கேள்வி கணைகளால் சூழப்பட்டிருந்த யோபுவினிடம் தேவன் இடைபட்ட போது, இறுதியாக யோபுவின் அறிக்கை “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்” (யோபு 42:2) என்பதே.

நம்முடைய வாழ்க்கையில் இப்போது நாம் கடந்துபோகும் பலவித சூழ்நிலைகள் நமக்குள்ளாகவும் ஏன் என்ற கேள்விகளை ஏராளம் எழுப்பலாம், ஆனால் இறுதியில் நாம் அறிய வேண்டியதும், அறிவிக்க வேண்டியதும் “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது.”

மனிதனுக்கு தேவன் தாமே தம்மை வெளிப்படுத்திய நாமங்களில் ஒன்று “சர்வவல்லமையுள்ள தேவன்” (ஆதி 17:1; யாத் 3:6), என்றால் அவர் சகலத்தையும் செய்ய வல்லவர் என்பதாகும். தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை (லூக் 1:37); தேவனாலே எல்லாம் கூடும் (மத்19:26). என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? (எரே32:27) என்று அவரே சவால் விடுகிறார். வேத புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் அவரின் மகத்தான வல்லமையை விவரிக்கிறது.

  • ஆதியாகமம் தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமையை வெளிப்படுத்துகிறது.
  • யாத்திராகமம் அவரின் விடுவிக்கும் வல்லமையை வெளிப்படுத்துகிறது.
  • லேவியராகமம் அவரின் பரிசுத்தப்படுத்தும் வல்லமையை வெளிப்படுத்துகிறது,
  • எண்ணாகமம் அவரின் கிரியைகளின் வல்லமையை வெளிப்படுத்துகிறது,
  • உபாகமம் அவரின் வார்த்தையின் வல்லமையை வெளிப்படுத்துகிறது.

    இவ்விதமாய் வேதாகமம் முழுவதும் அவரின் வல்லமையின் வரலாறு என்று சொன்னால் மிகையல்ல. சர்வவல்லவராகிய அவரின் வல்லமைக்கு அளவே இல்லை…

  1. எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் வல்லவர்.1 நாளா 29:12.
  2. வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வல்லவர்.ரோ 4:20,21.
  3. குணப்படுத்த வல்லவர்.லூக் 6:19.
  4. உதவிசெய்ய வல்லவர்.எபி 2:18.
  5. நிலைநிறுத்த வல்லவர்.ரோ 14:4.
  6. ஜெபத்திற்கு பதிலளிக்க வல்லவர்.எபே 3:20
  7. ஒப்புக்கொடுத்ததை காத்துக்கொள்ள வல்லவர்.2 தீமோ 1:12

ஆகவே நம்முடைய வாழ்க்கையில் அவர் சகலத்தையும் செய்ய வல்லவர் என்பதை உணர்ந்து, விசுவாசித்து, (மத் 9:28,29) நம்மை அவருக்கு நம்மை அர்ப்பணித்து வாழ்வோம். “வல்லவராகிய அவருக்கு… சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக.” ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: