கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்

தள்ளிவிடும் உலகில் வாழுகின்றோம், பெற்றோர் பிள்ளைகளையும், பிள்ளைகள் பெற்றோரையும், கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், எஜமான் வேலைக்காரனையும், படித்தவன் படியாதவனையும், பணக்காரன் ஏழையையும், அழகுள்ளோர் அழகற்றவர்களையும், பெரியவன் சிறியவனையும், சகோதரன் தன் சகோதரனையும், தயவின்றி தள்ளிவிடுகிறதை, இவ்வுலகில் தாராளமாக பார்க்கிறோம்,

தாவீதின் கூற்றும் அவ்வாறே, தகப்பனும் தாயும் கைவிட்டாலும், என்று சொல்லி முடித்து, கர்த்தர்என்னை சேர்த்துக்கொள்வார் என்றான். (சங் 27:10)

உண்மை அதுதான் கர்த்தர் யாரை? எங்கு? எவ்வாறு? எப்படி சேர்த்துக்கொண்டார், சேர்த்துக்கொள்கிறார் என வேதம் விளம்புவது ஆச்சரியத்திலும், ஆச்சர்யம் !!!

இதோ:

1. தொலைந்து போன ஆட்டைப் போல இருந்தோரை, தம் தொழுவத்தில் சேர்த்தார். ஏரே 23:3

2. பயனற்றதான பதரோடு ஒட்டியிருந்த கோதுமையை, (இரட்சிக்கப்பட்டவர்களை) பிரித்தெடுத்து தமது களஞ்சியத்தில் சேர்த்துக்கொண்டார். மத் 3:17

3. தாயை விட்டு தனித்துச்சென்ற, கோழி குஞ்சு போன்றிருந்த இஸ்ரவேலரை, தம் சிறகின் கீழே சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தார். மத் 23:37

4. புறந்தள்ளப்பட்ட கற்கள் போன்றோரை, தமது மாளிகையைக் கட்ட ஜீவனுள்ள கற்களாக
சேர்த்துக்கொண்டார். 1பேது 2:4-5

5. இஸ்ரவேலின் வேலிக்கு அப்பால் வேடிக்கை பார்த்து நின்றோரை, தமது காணியாட்சிக்குள் சேர்த்துக்கொண்டார். எபே 2:12

6. சிதறியிருந்த பலரை, தம் பிள்ளைகளாக ஒன்றாய் சேர்த்துக்கொண்டார். யோவான் 11:52

7. சந்நிதியில் வர தகுதியில்லாதோரை, தமது சர்வ சங்கமாகிய சபையிலே சேர்த்துக்கொண்டார். எபி 12:22-24

தாயின் கருவில் தோன்றும் முன்னே தெரிந்துகொண்டீரே
தாயைப்போல, சேர்த்துக் காத்து அனைத்துக்கொண்டீரே உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது

கர்த்தராலே உங்களோடு சேர்க்கப்பட்ட சகோதரன்.

✍️ கே. ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: