எனது வாஞ்சை

“என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” (சங் 63:1).  

 பல்வேறு விதமான பிரச்சினைகளும் போராட்டங்களும் நிரம்பிய ஒரு உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்க்கையில் ஏற்படுகின்ற நெருக்கடிகள், மன அழுத்தங்கள் நம்மை கீழ்நோக்கி  இழுக்கின்றன. இவ்வித சூழ்நிலையில், நம்முடைய வாஞ்சைகளை, விருப்பங்களை நாம் சரியாக வகையருக்க பழகவில்லையென்றால், சூழ்நிலையின் சுனாமிக்குள் சிக்கிக்கொள்வோம். 

நம்முடைய கவனத்தைக் கவருகின்றன ஏராளமான காரியங்கள் களத்தில் இருந்தாலும், கர்த்தரே நமது வாஞ்சையாய் இருக்கட்டும். “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்” (சங் 91:14) என்பது அவர் நமக்கு அருளின வாக்குத்தத்தம்.

வாழ்க்கையில் தேவனுக்கடுத்த காரியங்களில் நாம் வாஞ்சையுள்ளவர்களாய் இருப்போமாகில், எந்த சூழ்நிலையின் நடுவிலும் நாம் கீதம் பாட முடியும் (சங்கீதம் 63).

நம்முடைய வாஞ்சை எதன்மீது?

  1. தேவனின் மீது  வாஞ்சை

“மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” சங் 42:1. (ஏசாயா 26:9, 

  1. தேவ பிரசன்னத்தின் மீது வாஞ்சை

“காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன்” உ. பாட்டு 2:3. (சங் 91:1, லூக் 10:39)

  1. தேவ வசனத்தின் மீது வாஞ்சை

“திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்” 1 பேது 2:3. (அப் 17:11, சங் 119:40)

  1. தேவ வாசஸ்தலத்தின் (சபை) மீது வாஞ்சை

“என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால்… எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்” 1 நாளா 29:3. (சங் 26:8, 84:2)

  1. தேவ பிள்ளைகளின் மீது வாஞ்சை 

“இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி” பிலி 1:8. (ரோ 1:11, பிலி 2:26, 1 தெச 3:8)

  1. தேவ நாமம் மகிமைப்பட வேண்டும் என்ற வாஞ்சை

“ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்” பிலி 1:20. (1 கொரி 6:20).

  1. தேவ சமூகம் சேரவேண்டும் என்ற  வாஞ்சை

“இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்” 2 கொரி 5:2. (யோபு 19:26, 27).                                 

“கர்த்தாவே… உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது” ஏசாயா 26:8.

 “ஆதலால், எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்” பிலிப்பியர் 4:1.

கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: