மனந்திரும்புதல்

மனந்திரும்புதல் கிறிஸ்தவ வாழ்க்கையின் முதல்படி மட்டுமல்ல, அது கிறிஸ்தவத்தின் அடிப்படை சத்தியம். இன்று பல்வேறுவிதமான பிரசங்களை, செய்திகளை கேட்கிறோம். ஆனால், புதிய ஏற்பாட்டின் முதல் செய்தியும் முக்கிய செய்தியும் மனந்திரும்புதல் என்பதை அறிய வேண்டும்.

Repentance
  1. யோவான்ஸ்நானகனின் பிரசங்கத்தின் முதல் வார்த்தை – மனந்திரும்புங்கள்.

“மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம்பண்ணினான்.” மத்தேயு 3:2

  1. இயேசு கிறிஸ்துவின் பிரசங்கத்தின் முதல் வார்த்தை – மனந்திரும்புங்கள்.

“இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.” மத்தேயு 4:17

  1. பன்னிரண்டு சீஷர்களின் பிரசங்க ஊழியத்தின் முதல் பிரசங்கம் – மனந்திரும்புங்கள்.

“அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து,” மாற்கு 6:12

  1. உயிர்த்தெழுந்த கர்த்தர் முதலில் பிரசங்கிக்க கட்டளையிட்டது – மனந்திரும்புதல்.

“அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.” லூக்கா 24:47

  1. ஆதிவிசுவாசத்தின் முதல் போதனை – மனந்திரும்பி.

“நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.” அப் 2:38

  1. பவுலின் ஊழியத்தில் அவர் பிரசங்கித்த முக்கிய செய்தி – மனந்திரும்புவதைக்குறித்து.

“ தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன்.” அப் 20:26, 26:20

  1. ஏழு சபைகளுக்கு கொடுக்கப்பட்ட செய்தியில் முதல் ஆலோசனை – மனந்திரும்பி.

“மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக” வெளி 2:5

கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published.

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: