இதென்னமாய் முடியுமோ

இயல்புக்கு மாறான இயற்கை நிகழ்வுகளைக்கண்ட, முதல் நூற்றாண்டு மக்கள், கலக்கமுற்ற நிலையில், கவலையோடு பேசின வார்த்தை இதென்னமாய் முடியுமோ (அப் 2:12)

இன்றுள்ள அசாதாரண சூழ்நிலையும், இவ்வார்த்தைக்கு இன்னும் அழுத்தம் கொடுக்கிறது, COVID-19 எங்கு போய் முடியுமோ!

ஆனால், தேவனுடைய நல் வார்த்தையோ, நல்ல முடிவுகளுக்கு நல்வழி நல்குகின்றது, இதோ…

1. தேவ மனிதனின், செம்மையான வாழ்வின் முடிவு சமாதானம். சங் 37:37

2. தேவ ஆலோசனையில் நடப்பதின் முடிவு மகிமை. சங் 73:74

3. தேவ திட்டத்தில், தீமையை சகிப்பதின் முடிவு  வெகு ஜனத்திற்கு தேவ நன்மை. ஆதி 50:20

4. தேவ மகிமைக்கென்று, வாழ்வதின் முடிவு கனிதரும் வாழ்வு. பிலி 1:5

5. தேவ நாமத்தினிமித்தம், துன்பங்களை பொறுத்துக்கொள்வதின் முடிவு இரண்டத்தனை ஆசீர்வாதம். யாக் 5:11

6. தேவ சித்தத்தில், போராடி வாழ்வதின் முடிவு நீதியின் கிரீடம். 2 தீமோ 4:7

7, தேவனுக்கு அடிபணிந்து, வாழ்வதின் முடிவு நித்திய ஜீவன். ரோ 6:22

“எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று.” 1 பே 4:7

அவர் பாதம் வீழ்ந்து பணிந்து 
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்,
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்....
உங்கள் சகோதரன்
K. ராம்குமார்
ஓசூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: