என்னிடத்தில் கொண்டு வாருங்கள்

ஏமி, தன் மகன் மாற்குவின் தேவ பயமற்ற வாழ்வைக் கண்டு சோர்வுற்று அவனைத் திருத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாள். மன நிலை ஆலோசகர்களிடமும் அழைத்து சென்றும், அனைத்தும் தோல்வியில் முடிந்தது. விரக்தியோடு அவள் வேதத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது, “அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்” (மாற்கு  9:19) என்ற தேவ வசனம் அவள் உள்ளத்தை அசைக்கவே, ஜெபத்தின் வாயிலாக தன் மகன் மாற்குவை ஆணடவரிடம் கொண்டு சென்றாள். விளைவு, மாற்குவின் வாழ்வில் ஆண்டவர் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கினார். 

இப்படி ஆண்டவரிடத்தில் கொண்டுவரப்பட்டவைகளுக்கு உண்டான ஆச்சரியமான உண்மை சம்பவங்கள் இதோ…

ஆண்டவரிடத்தில் கொண்டுவரப்பட்ட

1. சிறு பிள்ளைகளை, அன்புக்கரங்களினால் அவர் அனைத்து ஆசீர்வத்தித்தார். -மாற் 10:14-16

2. அர்ப்பமாக எண்ணப்பட்ட அப்பத்தையும், மீனையும் கொண்டு ஆயிரங்களை போஷித்தார். -மத் 14:18

3. இருண்டுபோன கண்களைத் திறந்து, உலகத்தின் ஒளியான தன்னை பின்பற்றி நடக்கச் செய்தார். -லூக் 18:39-40

4. அவன் பாவி என்றறிந்தும் மகனே என்றழைத்து மன்னித்து சுகமாக்கினார். -மாற் 2:2

5. கழுதைக் குட்டியையும் கவனத்தில்க் கொண்டு, திருமறைத் திட்டத்தை நிறைவேற்றினார். -மாற் 11:7; சகரி 9:9

6. தோல்வியில்லை எல்லாம் வெற்றியே என நிரூபித்து, வெற்றிக்கு வழி காண்பித்தார். -மாற் 9:19-29

7. தம்மிடம் கொண்டுவரப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் பரிவுடன் பதிலளித்தார். -மத் 4:24

சாறிபாத் ஊர் விதவையின் மகனின் மரித்த உடலை, எலியா மேல் வீட்டிற்கு ஆண்டவரிடம் கொண்டு போனான். உயிருள்ள பிள்ளையாக திரும்ப கீழ் வீட்டிற்கு கொண்டுவந்தான் (1 ராஜா 17:19-23).

K ராம்குமார். தேவ ஊழியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: