உண்மையை உணர்த்தும் உருவகங்கள்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் சிறப்பு, அவர் தாம் போதிக்க விரும்பும் காரியங்களை உவமைகளின் மூலமாகவும், உருவகங்களின் மூலமாகவும் போதித்தார். அதே முறையை அப்.பவுலும் தன்னுடைய நிருபங்களில் பயன்படுத்தியிருப்பதை காணமுடியும்.

இதோ ” பவுல் தீமோத்தேயுவிற்கு எழுதின நிருபங்களில் “

உண்மையை உணர்த்தும் உருவகங்கள்…
 • தேவன் சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுபவர்.1 தீமோ 6:16
 • எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த கிறிஸ்து. 1 தீமோ 2:6
 • தேவ வரத்தை நீ அனல்மூட்டி எழுப்ப உனக்கு நினைப்பூட்டுகிறேன். 2 தீமோ 1:6
 • போராடிக்கிற மாட்டை வாய்க்கட்டாதே. 1 தீமோ 5:18
 • பிரயாசப்பட்டு பயிரிடுகிறவன் பலனில் பங்கடைய வேண்டும். 2 தீமோ 2:6
 • பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்கள் மண்ணும் மரமுமான பாத்திரங்கள் 2 தீமோ 2:20
 • நல்ல போர்சேவகனாய்த் தீங்கநுபவி. 2 தீமோ 2:3
 • ஒருவன் மல்லயுத்தம் சட்டத்தின்படி பண்ணாவிட்டால். 2 தீமோ 2:5
 • விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள். 1 தீமோ 2:19
 • மனசாட்சியிலே சூடுண்ட பொய்யர். 1 தீமோ 4 :1
 • சீர்கேடும் கிழவிகள் பேச்சுமான கட்டுக்கதைகள். 1 தீமோ 4:7
 • சோதனையிலும் கண்ணியிலும் விழுகிறார்கள். 1 தீமோ 6:9
 • பண ஆசை எல்லாத்தீமைக்கும் வேராயிருக்கிறது. 1 தீமோ 6:10
 • தேவ பக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாகிய மனுஷர்கள். 1 தீமோ 6:5
 • நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர். 1 தீமோ 6:1
 • இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. 2 தீமோ 4:7
 • நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன். 2 தீமோ 4:6
 • சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன். 2 தீமோ 4:17

“அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.” மாற் 4:33

K. ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: