பாலகருக்கு வெளிப்படுத்தினீர்

“பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால், உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.” மத் 11:25

தேவன் மனித சாயலில், இயேசுகிறிஸ்து என்ற பெயரில், இவ்வுலகில்  தம்மை வெளிப்படுத்தினார். இதை மனித குலத்தின் பெருங்கூட்ட மக்கள், இன்றளவும் மனங்கூசாமல் மறுக்கின்றனர்.

ஒரு விதத்தில் இவை  தேவனுக்கு விசனமாயினும், ஒரு சிறு கூட்டத்திற்கு இவ்வுண்மை வெளிப்படுத்தப்பட்டதில் அவருக்கு அளவில்லா ஆனந்தம்.

“யாருக்கு தம்மை வெளிப்படுத்த சித்தமானாரோ, அவர்களுக்கே தம்மை  வெளிப்படுத்தினார்” (லூக் 10:22)

1. சமுதாயத்தால் வெறுக்கப்பட்ட, சமாரியா பெண்ணுக்கு, “தேவன் யார்? அவரை எப்படி ஆராதிக்க வேண்டும் என்ற உண்மையை” வெளிப்படுத்தினார். யோவா 4:21-25

2. அவரின்  பாதரட்சையின் வாரைக்கூட அவிழ்க்க பாத்திரனல்ல என்ற யோவானுக்கு, “காணக்கூடாத தேவனை, மனிதகுலம் கண்டுகொள்ளுமென்ற உண்மையை” வெளிப்படுத்தினார். யோவா 1:15-27 (18)

3. கனவீனமாக கருதப்பட்ட கற்ஜாடி நீரையே கனிரசமாக்கி, தமது மகிமையை வெளிப்படுத்தினார். யோவா 2:11

4. தன் தவறை உணர்ந்த கள்ளனுக்கு, “தேவனுக்கு ஒரு இராஜ்ஜியம் உண்டென்பதை” வெளிப்படுத்தினார். லூக் 23:42

5. அகாலப்பிறவி போன்றவன் என்று அறிக்கையிட்ட பவுலுக்கு, “உயிர்தெழுதலின் வல்லமையை” வெளிப்படுத்தினார். 1 கொரிந்தி 15:7

6. பாமர மீனவனான யோவானுக்கு, “பரலோகத்தின் மகிமையை” வெளிப்படுத்தினார். வெளி 1:1

7. படிப்பறிவற்றப் பேதுருவுக்கு, “தமது வருகையில் பாடுகள் மறைந்து, பரவசம் சூழ்ந்திடுமென்பதை” வெளிப்படுத்தினார். 1 பேது 1:7

பாலகருக்கு தம்மை வெளிப்படுத்தினார் என்பது எவ்வளவு ஆச்சர்யம் !!!

உலகில் உயர்ந்தோருக்கு வெளிப்படுத்தாமல், 
பாலகர்களான நமக்கு வெளிப்படுத்தினார்
காரணம், அவர் நம்மேல் அன்பாயிருப்பதால். யோ 14:21,23

K. Ramkumar Hosur

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: