TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7இயேசு கிறிஸ்துதாழ்மை

கிறிஸ்துவின் எளிமை

“கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” பிலிப்பியர் 2:5

  1. அவர் பிறந்தபோது முன்னணையில் கிடத்தப்பட்டார்.

அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். லூக் 2:7

  1. வர் வளர்ந்தது முக்கியதுவம் இல்லாத ஊரிலே.

“ நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” யோவா 1:46

  1. அவர் வாழ்ந்த போது தலை சாய்க்க அவருக்கு இடமில்லை.

“ இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.” லூக் 9:58

  1. அவருக்கு அநேகர் உதவியாயிருந்தார்கள்.

“ தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.” லூக் 8:3

  1. அவர் இரவல் பொருட்களை பயன்படுத்தினார்.

“அந்தப்படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப்படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.” லூக் 5:3

“ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.” லூக் 21:2

  1. அவருடைய சீஷர்களுக்கு ஊழியம் செய்தார்.

“பின்பு பாத்திரத்தில் தண்ணீரை வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.” யோவா 13:5

  1. அவர் மரித்தபோது வேறொருவரின் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டார்.

“யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான்.” மத் 27:59,60

“சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.” பிலி 2:8 

கே. விவேகானந்த்

One thought on “கிறிஸ்துவின் எளிமை

  • Rev. A. Samson Paul Gnanaraj

    Could you send this Sharman notes in Tamil to my WhatsApp regularly ? – Revd. A. Samson Paul Gnanaraj
    WhatsApp number – 9842914008

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)