TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
Notesசங்கீதம்

நானோ

அவர்களும், நானும்.
  " சங்கீதங்களிலிருந்து…." 

சங்கீதக்காரன் தன்னைச்சுற்றி வாழ்ந்தோரின் வாழ்க்கையையும், கர்த்தருக்குள் தனது வாழ்க்கையையும் வேறுபடுத்தி எழுதினபோது, நானோ என கர்த்தருக்குள்ளான தன்னுடைய அனுபவத்தை எழுதுகிறார்.

  • அவர்கள் இரத்தப்பிரியர் – நானோ உமது மிகுந்த கிருபைனாலே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன். சங் 5:6-7
  • அவர்கள் உலகமக்கள் – நானோ நீதியில் உம்முடைய முகத்தை தரிசிப்பேன். சங் 17:14-15
  • அவர்கள் துஷ்ட மிருகங்கள் (சங் 22:12-21) – நானோ ஒரு புழு சங் 22:6
  • அவர்கள் கைகள் லஞ்சப்பணங்களால் நிறைந்திருக்கிறது – நானோ என் உத்தமத்திலே நடப்பேன. சங் 26:11
  • அவர்கள் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்கள் – நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக்காண்பேன். சங் 27:12-13
  • அவர்கள் என் பிராணனை வாங்கத்தேடுகிறார்கள் – நானோ, கர்த்தாவே உம்மை நம்பியிருக்கிறேன். சங் 31:14
  • அவர்கள் கேடானவைகளைப் பேசுகிறார்கள் – நானோ ஊமையனைப்போல வாய் திறவாதவன். சங் 38:12-13
  • அவர்கள் உள்ளத்தில் பொல்லாங்கு இருக்கிறது – நானோ தேவனை நோக்கி கூப்பிடுவேன். சங் 55:15-16
  • அவர்கள் தங்கள் செல்வப்பெருக்கத்தை நம்புகிறார்கள் – நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன். சங் 52:7-8
  • அவர்கள் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைக்காதவர்கள் – நானோ உம்மை நம்பியிருக்கிறேன். சங் 55:23
  • அவர்கள் முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள் – நானோ உம்முடைய வல்லமையை பாடி புகழுவேன். சங் 59:15-16
  • அவர்கள் ,ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் – நானோ சிறுமையும் எளிமையுமானவன். சங் 70:3-5
  • அவர்கள் பூமியிலுள்ள துன்மார்க்கர் – நானோ யாக்கோபின் தேவனை கீர்த்தனம்பண்ணுவேன். சங் 75:8-9

ஓநாய்களுக்குள்ளே ஆட்டுக்குட்டியைப்போல சங்கீதக்காரர்கள் காணப்பட்டாலும், நல்ல மேய்ப்பர் தங்களோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையே, அவர்கள் கர்த்தரை துதித்துப்பாடிட காரணமாய் அமைந்தது. அந்த நல்மேய்ப்பராம் கர்த்தர் நம்மோடிருக்கிறார்.

நம்மை சுற்றியுள்ள ஜனங்களும் இதுபோலவே காணப்படலாம். ஆனால் நாமோ?

K. ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)