TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
Notesஊழியன்பவுல்

தேவனுடைய மனிதனின் சந்தோஷங்கள்

பவுலின் வாழ்க்கையிலிருந்து
(பிலிப்பியருக்கு எழுதின நிருபம் )

  • சந்தோஷத்துடன் விண்ணப்பம் செய்கிறேன். 1:4
  • எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். அதனால் சந்தோஷப்படுகிறேன். 1:18
  • நான் மறுபடியும், உங்களிடத்தில் வருவதினால் சந்தோஷப்படுகிறேன். 1:25
  • உங்களின் சந்தோஷத்திற்காக பிழைத்திருக்கிறேன். 1:26
  • உங்கள் ஒற்றுமை, எனது சந்தோசத்தின் நிறைவு. 2:2
  • நீங்கள் ஜீவ வசனத்தை பிடித்திருந்தால், கிறிஸ்துவின் நாளிலே எனக்கு சந்தோஷம். 2:14
  • விசுவாசத்திற்காக, பலியாகிறதிலே சந்தோஷப்படுவேன். 2:17
  • நீங்களும் மகிழ்ந்து என்னுடனே சந்தோஷப்படுங்கள். 2:8
  • எப்பாப்பிராவை மிகுந்த சந்தோசத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள். 2:29
  • எழுதினவைகளையே எழுதுகிறேன் சந்தோஷப்படுங்கள். 3:1
  • என் சந்தோஷத்தின் கிரீடம் நீங்களே. 4:1
  • மறுபடியும், உங்கள் மனம் மலர்ந்தபடியால் கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன். 4:10
ஆகவே கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். பிலி 4:4
“சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க
நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும்
நம்மை வழி நடத்தும் தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க”
K. ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)