TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
7COVID-19Notesசோதனை

நெருக்கப்படுகிற காலங்களில்

பணம், மனம், குணம், இனம், பெலம், நிலம், களம், குலம், மதம் என்ற எவ்வித பாகுபாடின்றி, கொரோனாவினால் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டு, செயலற்ற நிலையில் காணப்படும் அனைவருக்கும், இந்த நெருக்கத்தின் காலங்களில் (சங்கீதம் 9:9) செய்யவேண்டிய ஆவிக்குரிய செயல்முறையை கற்று, நெருக்கத்திலிருந்து வெளிவர, வேத வசனங்கள் வழிகாட்டுகின்றன.

1. நெருக்கத்திற்கு காரணமான பாவங்களை அகற்றிவிடுவதும், நியா 10:9-10

2. நெருக்கங்கள் நீடிக்கும்போது, கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்திக்கொள்வதும், 1 சாமு 30:6

3. நெருக்கத்தின் சூழலில், தேவனை நோக்கி கூப்பிடுவதும், 2 சாமு 22:7

4. நெருக்கத்தின் நேரங்களில், அமர்ந்திருந்து ஆண்டவரின் அரும் பண்புகளை அறிந்துகொள்வதும், ஏரே 10:18

5. நெருக்கங்கள் பெலவீனப்படுத்தும்போது, உம் கிருபை எனக்கு போதுமென்றிருப்பதும், 2 கொரிந்தி 12:10

6. நெருக்கங்கள் எப்பக்கத்திலிருப்பினும், ஒடுங்கிடமாட்டேன் என நம்பிக்கையோடிருப்பதும், 2 கொரிந்தி 4:8

7. நெருக்கங்கள் நாள்தோறும் அதிகரித்தாலும், நான் ஆராதிக்கிறவர் அதை அறிவார், என்றறிந்திருப்பதும், 2 கொரிந்தி 11:28-31

நெருக்கமான பாதையில், மத் 7:14 – பயணிப்போருக்கு பயனளிக்கின்றன.

நெருக்கப்பட்டும் மடிந்திடாமல் 
கர்த்தர்தாம் நம்மை காத்ததாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே.

K. ராம்குமார் ஓசூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)