அவரே!! அவரே!! அனைத்தும் அவரே!!

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே, அனைத்துலக படைப்பாளர்.

ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது, பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும்,
சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
(கொலோ 1:16)

அவரே அகிலத்தின் ஆதீனம். கொலோ 1:18

அவரே உலகத்தின் அஸ்திபாரத்தை, அசையாமல் அமைத்தவர். சங் 24:1-2

அவரே நம்மை உண்டாக்கினவர், சங் 100:3

அவரே நம் விலைமதிப்பில்லா, மீட்கும் பொருளானவர். 1தீமோ 2:6

அவரே மரித்தோரின் உயிர்தெழுதலின், முதல்வர். கொலோ 1:18

அவரே நம் தலை, சரீரமாகிய சபைக்கு. கொலோ 1:18

அவரே நமக்கு ஞானம், பரிசுத்தம் 1கொரிந்தி 1:31

அவரே நம் சமாதான காரணர். எபே 2:14

அவரே சகல உபத்திரவங்களிலும், நமக்கு ஆறுதல். 2கொரிந்தி 1:4

அவரே அனைவருக்கும், நியாதிபதி. அப் 10:4

உமையன்றி அணுவேதும் அசையாதையா

உம் துணையின்றி உயிர்வாழ முடியாதய்யா

தேவன் பூமியனைத்திற்கும் ராஜா, கருத்துடனே அவரை போற்றிப் பாடுங்கள். சங் 47:7
🎵🎸🎷🎻

K. ராம்குமார். ஓசூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: