ஒளியாகிய கிறிஸ்து

“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்றார் இரட்சகர் இயேசு கிறிஸ்து (யோவான் 8:12). இன்று உலகினிலே மனிதர்கள் ஒளியை தேடி அலைகிறார்கள், காரணம் மனிதனின் வாழ்க்கை இருளாக இருக்கின்றது. தான் செய்கிறது இன்னதென்றும், தான் போகும் எதுவென்றும் தெரியாததினால், மங்கிப்போகிறதும், மாயையானதுமான அநேக காரியங்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஆனால் உலகிலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற “மெய்யான ஒளி” ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

ஒளியாகிய இயேசு கிறிஸ்துவை குறித்து வேதம் கொடுக்கும் சாட்சி: (யோவான் 1ம் அதிகாரம்)

1. ஜீவஒளி. யோவான் 1:4

பொய்யானதும், மாயமானதுமல்ல, அவர் உயிருள்ள ஒளி (யோவா 8:12).

2. மனிதர்களுக்கான ஒளி. யோவான் 1:4

இவரே ஜாதிகளுக்கு (ஜனங்களுக்கு) ஒளியாக ஏற்படுத்தப்பட்டவர் (ஏசா 42:7; லூக் 2:30). காரணம், மனிதன் அந்தகாரத்திலிருக்கிறான் (லூக் 1:78). இருளிலுள்ள ஜனங்களுக்கு ஒளி அவசியம்.

3. இருளில் பிரகாசிக்கிற ஒளி. யோவான் 1:5

இயேசு கிறிஸ்து பாவம் என்கிற இருள் நிறைந்த உலகிற்கு வந்த தேவகுமாரன்.

4. இருள் பற்றிக்கொள்ளாத ஒளி. யோவான் 1:5

அவரிலே பாவமில்லை. “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?” (யோவான் 8:46). என்று கேட்ட ஒரே சரித்திர புருஷர்.

5. சாட்சியாக அறிவிக்கப்பட்ட ஒளி. யோவான் 1:7,8

அவர் தேவகுமாரனென்று வேதமும், வேதமாந்தர்களும் சாட்சியாக அறிவித்திருக்கிறார்கள். இன்றும் உலக முழுவதும் சாட்சியாக அறிவிக்கப்பட்டு வரும் ஒரே நபர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவரை குறித்து எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாது (யோவான் 21:25).

6. எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளி. யோவான் 1:9

இயேசு கிறிஸ்து என்னுடைய பாவத்தின் பரிகாரத்திற்காக சிலுவையில் மரித்து, உயிர்த்தவர் என்று விசுவாசித்து, ஆண்டவரும் இரட்சகருமாக இருதயத்தில் ஏற்றுகொள்கிற எந்த மனிதனுடைய வாழ்க்கையையும் அவர் பிரகாசிக்கச் செய்கிறார். (யோவான் 8:12).

7. மெய்யான ஒளி. யோவான் 1:9

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் (1 யோ 5:20).

“அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறோரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” ( அப்.நடபடிகள் 4:12).

பாவ இருள் நிறைந்த உலகிற்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒளியாக வந்திருந்தும், மனிதனின் செயல்கள் பொல்லாப்பு நிறைந்திருக்கிறபடியால் இருளையே மனிதன் விரும்புகிறான். ஆனால் அதன் விளைவு நரக ஆக்கினை என்பதனை அறியாதிருக்கிறான் (யோவான் 3:19,20). ஆனால் உண்மையை நாடுகிறவன் “மெய்யான ஒளியாகிய” இயேசு கிறிஸ்துவினிடத்தில் வருவான் (யோவான் 3:21).

நீங்கள் உண்மையான ஒளியிடம் வந்திருக்கிறீர்களா?

Vivekk7

One thought on “ஒளியாகிய கிறிஸ்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: