சாத்தானின் தந்திரங்கள்

சாத்தானின் தந்திரங்கள்

ஏசாயா 36ம் அதிகாரம்

இந்த சம்பவம் எசேக்கியா இராஜா அரசாண்ட 14ம் வருஷத்தில் நடைபெற்றது (36:1).  எசேக்கியா யூதாவில் பல சீர்திருத்தங்களை செய்த இராஜா (2 இராஜா 18:1-4). ஜனங்களை தேவனண்டையில் திருப்பினான், பஸ்காவை ஆசரிக்கச் செய்தான் (2 நாளா 29 & 30). ஆனால் அவனுடைய ஆட்சியின் பதினாலாம் வருஷத்தில், சத்துருவின் சேனையின் தந்திரத்தை எதிகொள்ள வேண்டிவந்தது. அசீரியா இராஜாவாகிய சனகெரிப்பின் இராணுவம்  லாகீஷை முற்றுகையிட்டிருந்தது.

இராஜாவாகிய சனகெரீப், எருசலேமை சரணடையும்படி தன்னுடைய தளபதிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினான் (36:2-4). எருசலேமை கைப்பற்றி அழிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம், ஆனால் அதற்கு அவர்கள் தந்திரமாக செயல்பட்டார்கள். அவை நம்முடைய சத்துருவாகிய சதிகார சாத்தானின் தந்திரங்களை நினைவுபடுத்துகிறது. ஏதேனில் ஏவாளிடத்திலும் (ஆதியாகமம் 3), வானாந்திரத்தில் நம்முடைய ஆண்டவர் இருந்தபோதும் (மத்தேயு 4) சாத்தான் நடந்துகொண்ட விதங்களை ஞாபகப்படுத்துகிறது.

“அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.” (2 கொரி 2:11)

நம்முடைய விசுவாசத்தை குழைத்துப்போட சாத்தான் செய்யும் தந்திரங்கள்.

1. நமது நம்பிக்கையை குறித்து கேள்வி எழுப்புகிறான். ஏசா 36:4

தேவனுடைய வசனத்தின் மீதான சந்தேகத்தை உண்டுபண்ணுகிறான்.

நம்பிக்கை என்ற வார்த்தை இந்த பகுதியில் 7 முறை வருகிறது.

2. நமது தவறுகளை சுட்டிகாட்டி தன்னை நம்பவைக்கிறான்.  ஏசா 36:6-9

இவர்கள் எகிபதின்மீது நம்பிக்கை வைத்திருந்தனர் (ஏசா 31:1). அது பிரயோஜனமற்றது என்றும் கர்த்தர் எச்சரித்திருந்தார் (30:2, 7). இப்பொழுது அதை சுட்டி காண்பித்து சோர்வடைய செய்து தன்னை நம்பவைக்கப்பார்கிறான்.

3. தேவனை குறித்த தவறான எண்ணங்களை விதைப்பான். ஏசா 36:7

தேவன் உன்னை நேசிக்கவில்லை. உன்னை அழிக்கவே சகலவற்றையும் ஆயத்தப்படுத்துகிறார் (36:10) என்று சூழ்நிலைகளையும், உண்மைகளையும் திரித்து கூறுகிறான்.

4. உன்னோடு யாரும் இல்லை என்று பரிகசிப்பான். ஏசா 36:8

நீ பெலனற்றவன், உன்னிடத்தில் குதிரைகளில் ஏறும் அளவுக்குகூட ஆட்கள் கிடையாது. உனக்கு ஒருவரும் உதவிசெய்யமாட்டார்கள்.

5. தவறு செய்துவிட்டாதாக குற்றம்சாட்டி பயத்தை உண்டுபண்ணுவான். ஏசா 36:13, 14.

எசேக்கியாவின் வார்த்தைகளை நம்பினது தவறு, இதன் விளைவை அனுபவிப்பீர்கள் (36:12) என்று பயத்தை உண்டுபண்ணினான்.

தவறான முடிவெடுத்துவிட்டீர்கள் என்ற பயமுறுத்தல் (36:14,15).

6. தேவவார்த்தையை கேளாதபடி தடை செய்தல். ஏசா 36:13-16

தேவனுடைய மனிதனாகிய எசேக்கியாவின் விசுவாச வார்த்தைகளை கேட்ககூடாதபடி செய்தல் (36:18).

“எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள்” (36:16)

7. சலுகைகளை வாக்குறுதி செய்து வஞ்சிதல். ஏசா 36:16, 17

“நீங்கள் என்னோடே ராஜியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்” 36:16

எனக்கு இணங்கினால் சுகமாய் வாழலாம்.

இந்த தந்திரமான வார்த்தைகளை நாம் எப்படி எதிர்கொள்வது?

1. அவன் சத்ததை கேட்பதை தவிருங்கள். ஏசா 36:11

2. மெளனமாயிருங்கள். சா 36:21

3. எல்லாவற்றையும் இராஜாதி ராஜாவிடம் அறிவியுங்கள். ஏசா 36:22

கர்த்தர் நமக்காக செயல்படுவார். ஏசா 37:36

கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: