மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.

“மகிமையின் மேல் மகிமை” என்பது எவ்வளவு அழகான வார்த்தை. தேவன் நம்மை குறித்து விரும்புகிற மிக முக்கியமான நோக்கம், மகிமையின் மேல் மகிமையடைய வேண்டும் என்பது மட்டுமல்ல. அத்தோடு நாம் மறுரூபமடைய வேண்டும் என்பதுமாகும் (2 கொரி 3:18).

அதன் முன்மாதிரியை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து  மறுரூப மலையில் நிகழ்த்திக் காட்டினார் (மத் 17:1-9).

மகிமையின் மேல் மகிமை அடையும்போது, நம்மில் உண்டாகும் மறுரூபம்

  1.  முகத்திலே மறுரூபம்.  மத் 17:2

“அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது,”

  1. வஸ்திரத்தில் மறுரூபம்.  மத் 17:2

“அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.”

  1.  கண்களில் மறுரூபம்.  மத் 17:3

“மோசேயும், எலியாவும்… அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.”

  1.  செவியில் மறுரூபம்.  மத் 17:3

“மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.”

  1.  விருப்பத்தில் மறுரூபம்.  மத் 17:4

“ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது”

  1.  அர்ப்பணிப்பில் மறுரூபம்.  மத் 17:6

“சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து,”

  1.  விசுவாசத்தில் மறுரூபம்.  மத் 17:8 

“ இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை”

கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: