விசுவாசத்தோடு தைரியமாய் செயல்படுதல்
பிரச்சனையான சூழ்நிலையில் விசுவாசத்தோடு செயல்பட்ட யோனத்தான் 1 சாமுவேல் 14:1-23
இஸ்ரவேலை யுத்த மேகம் சூழ்ந்து இருந்தது. சத்துருக்களாகிய பெலிஸ்தியர் வியூகம் அமைத்து இஸ்ரவேலை தாக்க ஆயத்தமாய் இருந்தனர் (13:17). இஸ்ரவேலை காப்பாற்ற வேண்டிய இராஜாவாகிய சவுலோ, மாதுளம் மரத்தின் கீழ் படைவீரர்கள் சூழ்ந்திருக்க அமைதியாய் இருந்து விட்டான் (14:2). சத்துருக்களின் தந்திரம், இஸ்ரவேலை நிராயுதபாணிகளாக நிறுத்த வேண்டும் என்பதாகும். அதற்காக இஸ்ரவேலர்களை ஆயுதம் செய்யக்கூடாதபடி பார்த்துக் கொண்டனர் (13:19,20). இஸ்ரவேலில் 600 பேர்களில், சவுலையும் யோனத்தானையும் தவிர ஒருவரிடமும் ஆயுதம் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் யோனத்தான் தன்னிடம் உள்ள ஆயுதத்தைக் கொண்டு விசுவாசத்தோடு செயல்பட்டான்.
நம்மிடத்தில் உள்ள எளிய விசுவாசத்தை நாம் செயல்படுத்த வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். யோனத்தானின் செயல், செயல்படுகிற விசுவாசம் எப்படிப்பட்டது என்பதை நமக்கு கற்பிக்கிறது.
செயல்படுகிற விசுவாசம்
- சுகபோகத்தை அனுபவித்து சும்மா இருக்காது. 14:1,2
- தடைகளை பொருட்டாக எண்ணாது. 14:4,5
போசேஸ் = பளபளக்கும். வழுக்கும்
சேனே = முட்புதர்
- கர்த்தரை நம்பும். 14:6
- கர்த்தரின் கிரியைகளை நம்பும் 14:6
- உடன் இருப்பவரை உற்சாகப்படுத்தும். 14:7
- கர்த்தரின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கும். 14:8-10
- பின்பற்றும்படி அடிச்சுவடுகளை விட்டுப் போகும். 14:12,13
இந்த எளிய விசுவாசத்தை கர்த்தர் கனப்படுத்தினார்.
- சத்துருக்களுக்கு திகிலையும் பயத்தையும் உண்டாக்கினார். 14:15
- ஒத்தாசைகளை அனுப்பினார். 14:21
- பயந்தவர்களை பாய்கிறவர்களாய் மாற்றினார். 14:22
நம்முடைய எளிய விசுவாசத்தை கனப்படுத்துகிற கர்த்தர் உண்டு. விசுவாசத்தை செயலில் காண்பிப்போம் தேவ மகிமையை காண்போம்.
–கே. விவேகானந்த்
There is contradiction between “Our faith and God’s will and God’s plan. If we implement our faith through prayer to proceed something in our life and the same time the God’s will or God’s plan is activated in another way. Explain.