காலேப்

கிறிஸ்தவ வாழ்வு என்பது தேவனால் வாக்குப்பண்ணப்பட்டவைகளை சுதந்தரிக்க கூடிய சுதந்தரித்தலின் வாழ்க்கை. “நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து,” என வேதம் சொல்லுகிறது ( எபி 6:11).

இஸ்ரவேலர்கள் கானானை சுதந்தரிக்க முன்னேறிக் கொண்டிருக்கும்போது, அவர்களின் இறுதி யுத்தம் மலை நாடாகிய எபிரோனை சுதந்தரிப்பதாகும். காலேப் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தின்படியே அதை சுதந்தரித்துக் கொண்டார். அதன் காரணம் காலேப் வேறே ஆவியை உடையவராய் இருந்தார் (எண் 14:24). இங்கு ஆவி என்பது குணாதிசயத்தை வெளிப்படுத்துகின்ற ஒன்று (1 பேதுரு 3:4). காலேபின் வேறே ஆவியே (குணமே) அவர் எபிரோனை சுதந்தரிக்க காரணமாக அமைந்தது.

காலேபின் வேறே ஆவி என்ன?

1. விசுவாசத்தின் ஆவி. எண் 13:30, 14:24, எபி 11:33.

2. உத்தமத்தின் ஆவி. எண் 14:24, யோபு 14:8,9,14.

3. தாழ்மையின் ஆவி. எண் 14:24.

என் தாசன்

4. பெலத்தின் ஆவி. எண் 14:10-12.

5. தெளிவின் ஆவி. எண் 14:6-8.

காலேப் குழம்பிக் கொண்டிருக்கவில்லை. கர்த்தருக்கு பிரியமாய் இருந்தால் அந்த தேசத்தை நமக்கு தருவார் என்கிற தெளிவை உடையவராய் இருந்தார்.

6. நிலைவரமான ஆவி. யோசு 14:10,11.

45 வருடங்கள் கடந்திருந்தாலும், கர்த்தருடைய வார்த்தையின் மீது அதே விசுவாசம், அதே நம்பிக்கை, அதே பெலன், அதே ஆவி.

7. ஜெப ஆவி. யோசு 14:12-14.

கேட்டு பெற்றுக் கொண்டார்.

கே. விவேகானந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: