TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
Notesதீமோத்தேயுபவுல்வேதாகம மனிதர்கள்

நீ! நீ! நீ!

“நீயோ, தேவனுடைய மனுஷனே.” 1 தீமோ 6:11

பவுல் தீமோத்தேயுவிற்கு எழுதின நிருபங்களில், “நீ” என்ற வார்த்தையை, பல முறை பயன்படுத்தியுள்ளார்.
இதோ அவைகள்:

( தீமோத்தேயுவிற்கு எழுதின முதலாம் நிருபம்)

நீ வேற்றுமையான உபதேசங்களை சிலர் போதியாதபடி அவர்களுக்கு கட்டளையிடு. 1:3

நீ நல்ல போராட்டம்பண்ணு. 1:18

நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு. 1:18

நீ தேவனுடைய வீட்டில் நடக்க வேண்டிய வகையை அறி. 3:15

நீ சகோதரருக்கு போதி. 4:6

நீ அநுசரித்த நற்போதகத்தில் தேறினவனாகு. 4:6

நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு. 4:11

நீ விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. 4:12

நீ தேறுகிறதை யாவருக்கும் விளங்கப்பண்ணு. 4:15

நீ சாட்சிகளற்ற, குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாதே. 5:19

நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாதே. 5:21

நீ உன் பலவீனங்களை, பலப்படுத்து. 5:23

நீ பண ஆசையை விட்டு ஓடு. 6:11

நீ நீதி, தேவபக்தி, விசுவாசம், அன்பு, பொறுமை, சாந்தகுணத்தை அடையும்படி நாடு. 6:11

நீ நல்ல போராட்டத்தைப் போராடு. 6:12

நீ கற்பனையைமாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள். 6:13

நீ உன்னிடம் ஒப்புவிக்கப்பட்டதை காத்துக்கொள். 6:20

( தீமோத்தேயுவிற்கு எழுதின இரண்டாம் நிருபம் )

நீ உனக்கு உண்டான தேவவரத்தை அனல்மூட்டி எழுப்பிவிடு. 1:6

நீ சுவிஷேசத்திற்காக தீங்கநுபவி. 1:8

நீ ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தை, கைக்கொண்டிரு. 1:13

நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு. 2:1

நீ என்னிடத்தில் கேட்டவைகளை, மற்ற மனுஷர்களிடத்தில் ஒப்புவி. 2:2

நீ இயேசு கிறிஸ்துவிற்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி. 2:3

நீ உன்னை தேவனுக்கு முன்பாக, உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. 2:15

நீ தேவபக்தியின் வேஷந்தரித்தவர்களை விட்டு விலகு. 3:5

நீ எல்லாவற்றையும், நன்றாய் அறிந்திருக்கிறாய். 3:10

நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு. 3:14

நீ பரிசுத்த வேத எழுத்துக்களை, சிறுவயதுமுதல் அறிந்தவன். 3:15

நீ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு. 4:5

நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வா, ஏனென்றால் எல்லோரும் என்னைவிட்டுப் பிரிந்து போய்விட்டனர். 4:9-10,

நீ எச்சரிக்கையாயிரு, வெகு தீமையை செய்தவனுக்கு. 4:14-15

நீ கால சூழ்நிலைகளைகளுக்கு ஜாக்கிரதையாய் செயல்படு. 4:21

யார் இந்த நீ?

தீமோத்தேயு மட்டுமா?
இல்லை, நீங்களும் நானும்தானே இந்த “நீ”

கே. ராம்குமார்

One thought on “நீ! நீ! நீ!

  • M. Jothi Joshua

    Good messages

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)