நெருக்கத்தின் நேரங்களில்…

நம் தேசம் மிக  நெருக்கமான நிலையை சந்தித்து வருகின்றது. அனைத்து துறைகளிலும் நெருக்கடிகள் முற்றி, மோசமான சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம. நெருக்கடியை சமாளிக்க அரசு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்விக்கு வித்திடுகின்றன.  இருந்தபோதிலும், நெருக்கத்தை வெல்வதற்கு வேதம், நமக்கு  அற்புதமான ஆலோசனையை நல்குகிறது.

நெருக்கத்தின் நேரங்களில்…

1. தேவனே நம்மை நெருக்கும்போது, (ஏரே 10:18) சிந்தித்து சீர்ப்படுகிறோம்.

2. தோல்விகள் நெருக்கும்போது, (நியா 10:10)  மனம் வருந்தி மன்னிப்படைகிறோம்.

3. இழப்புகள் நெருக்கும்போது, (1சாமு 30:6) கர்த்தருக்குள் திடப்படுகிறோம்.

4. சூழ்நிலைகள் நெருக்கும்போது, (2 சா 22:7) ஒத்தாசை வரும் பர்வதத்தை உற்று  நோக்குகிறோம்.

5. எப்பக்கமும் நெருக்கப்படும்போது, (2 கொரிந்தி 4:8)  ஒடுங்கிவிடாது ஓடுகிறோம்.

6. கிறிஸ்துவினிமித்தம் நெருக்கப்படும்போது, (2 கொரிந்தி 12:10) சந்தோஷத்துடன் சகிக்கின்றோம்.

7. நெருக்கங்கள் நீடிப்பதில்லை, அவை தேவனால் நீக்கப்படும்போது நம் நெஞ்சம் நிறைந்து தேவனை மகிமைப்படுத்த வழிசெய்கின்றன (சங் 18:6-20).

“நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்” சங்கீதம் 9:9

நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும், நம்மை காண்கின்ற தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க !!!

K. ராம்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: