இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனே கூட நடந்துபோனார்

மனக்கலக்கத்துடனே சீஷர்களில் இருவர் எம்மாவு என்னும் கிராமத்துக்கு நடந்து செல்லும்போது, “இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனே கூட நடந்துபோனார்” (லூக் 24:15). என்று வாசிக்கிறோம்.

சந்தேகம் என்னும் திரை அவர்களுடைய இருதயத்தின் மேல் காரிருள் போல படர்ந்திருந்தது. வியப்பும் பயமும் அவர்களை ஆண்டு கொண்டன. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. அந்த சமயத்திலே அவர்களின் சந்தேகத்தையும், பயத்தையும் அகற்றும்படியாக இயேசு கிறிஸ்து அவர்களுடன் சேர்ந்து நடந்தார்.

     நம்முடைய வாழ்க்கையும் ஒரு பயணத்தை போன்றதே. வாழ்வின் சூழ்நிலைகளில் பயமும் கவலையும் சந்தேகங்களும் அதிகமாகவே நாம் எதிர்கொள்கிறோம். அந்த நேரங்களில் எல்லாம் உயிர்த்தெழுந்த கர்த்தர் நம்முடனே சேர்ந்து நடந்து, நமக்கு ஆறுதலையும், தைரியத்தையும் தருகிறார் என்பது எவ்வளவு உற்சாகம் அளிக்கக்கூடிய காரியம் !!!

கர்த்தருக்குள் மறைந்த தேவ ஊழியர்
C. V. சாமுவேல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: