கர்த்தரோ !

“கர்த்தருடைய ஒப்பற்ற தன்மையை அழுத்தமாக வேதம் வர்ணிக்கும்போது, “கர்த்தரோ” என்ற வார்த்தை, அவரின் ஆழமானத் தன்மையை அழுத்தமாக, நம்மை அடிக்கோடிடச் செய்கிறது.

1. கர்த்தரோ மெய்யான தெய்வம்.
( மனுஷ கைவேலையான, பொய்யான தெய்வமல்ல ) ஏரே 10:9-10

2. கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர். ( வாயிருந்தும் பேசாத விக்கிரகமல்ல ) 1 நாளா 16:26

3. கர்த்தரோ உண்மையுள்ளவர். ( தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார் ) 2 தெச 3:3

4. கர்த்தரோ எனக்கு துணையாக நின்றார். ( எல்லோரும் என்னைக் கைவிட்டபோதும் ) 2 தீமோ 4:17

5. கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார். ( சிறுமையும் எளிமையுமான என்மீது ) சங் 40:17

6. கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். ( பலரும் எனக்கு எதிராக எதிராக எழும்பியபோது ) 2 சாமுவேல் 22:19

7. கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார். ( அவர் முகம் பார்க்கும் மனுஷனல்ல ) 1 சாமு 16:7

என்றாலும்

நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம், கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

நம் வாழ்வில் சம்பவிக்கும் தேவ செயல்களை, நாம் சாட்சியாக அறிவிக்கும் போதெல்லாம் “கர்த்தரோ” என்ற வார்த்தையை அழுத்தமாக பயன்படுத்துகிறோம், இன்னும் பயன்படுத்துவோம் கர்த்தருக்கு மகிமையாக “கர்த்தரோ” என்று….

உங்கள் சகோதரன்
✍ K ராம்குமார்

One thought on “கர்த்தரோ !

  • June 10, 2019 at 8:01 pm
    Permalink

    Useful points

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: