TAMIL SERMON NOTES

Free Tamil Christian Messages, Bible Study outlines, Sermon Notes, Audios, and Videos

TAMIL SERMON NOTES
கண்கள்கர்த்தர்

கர்த்தருடைய கண்கள்

கர்த்தருடைய கண்கள் உறங்குவதில்லை. சங் : 121 : 4.

கர்த்தருடைய கண்கள் உறங்குவதில்லை, அவருடைய கண்கள் எங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது. மனுபுத்திரர்களை கண்ணோக்கிக் கொண்டிருக்கிறது என்று வேதாகமம் சொல்கிறது.

கர்த்தருடைய கண்களை குறித்து தேவனுடைய மனிதர்களது சாட்சியையும், கர்த்தருடைய கண்கள் எவைகள் மேல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்க்கப் போகிறோம்.

கர்த்தரது கண்களைக் குறித்த தேவனுடைய மனிதர்களின் சாட்சி:

1. ஆகார் : நீர் என்னைக் காண்கிற தேவன். ஆதி : 16 : 13

2. யோபு : உம்முடைய கண்கள் என் மேல் நோக்கமாயிருக்கிறது. யோபு : 7 : 8

3. தாவீது : என் கருவை உமது கண்கள் கண்டது. சங் : 139 : 16

4. பேதுரு : நீதிமான்கள் மேல் நோக்கமாக இருக்கிறது. 1 பேதுரு : 3 : 1

5. எரேமியா : உம்முடைய கண்கள் சத்தியத்தை நோக்குகின்றது. எரே : 5 : 3

கர்த்தருடைய கண்கள் எவைகள் மேல் நோக்கமாயிருக்கிறது.

1. தேசத்தின் மீது கர்த்தருடைய கண்கள். (Eyes on the Nation) உபா : 11 : 12

2. ஆலயத்தின் மீது கர்த்தருடைய கண்கள். (Eyes on the Temple) 2 நாளாக: 6 : 20, 7:15, சங்கீதம் : 11 : 4, நெகேமியா : 1 : 6

3.  பூமியின் மீது கர்த்தருடைய கண்கள் (Eyes on Earth) 2 நாளாக : 16 : 9, சங்கீதம் : 14 : 2; சங்கீதம் 33 : 13,14, சங்கீதம் 102 : 20

நம்முடைய கண்கள் – Our Eyes.

  • ஒத்தாசைக்கு நேராக  சங் : 121 : 1
  • வேலைக்காரரின் கண்களைப் போல. சங் : 123 : 1 , 2

கர்த்தரின் கண்கள்:

  • தேசத்தின் மீது வைக்கப்பட்டிருக்கிறது
  • ஆலயத்தின் மீது வைக்கப்பட்டிருக்கிறது
  • பூமியின் மீது வைக்கப்பட்டிருக்கிறது.
  • நல்லோர் மீதும் தீயோர் மீதும் அவர் கண்ணோக்கமாயிருக்கிறார்.
  • உங்கள் ஜெபத்திற்கு அவரது கண்கள் திறந்த வண்ணமாய் இருக்கிறது.
  • அவர் கண்கள் உங்கள் மேல் நோக்கமாய் இருக்கிறது.

“கர்த்தருடைய கண்கள் எப்போதும் என்மேல் நோக்கமாக இருக்கிறது” என்று சொல்லுங்கள்.

தேவகிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமேன்.

போதகர். ஜாண்ராஜ், மும்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

%d bloggers like this: